நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுார் விஸ்வநாத சுவாமி ஜீவ சமாதியில் குரு பூஜை விழா நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த விஸ்வநாத சுவாமி ஜீவ சமாதி உள்ளது. இங்கு மகா குருபூஜை விழா நேற்று முன்தினம் நடந்தது.
இதையொட்டி, காலை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் இருந்து 108 பால்குடம் எடுத்து வரப்பட்டு, காலை 10:30 மணி முதல் 12:30 மணி வரை சிறப்பு பூஜைகள், அபி ேஷ க ஆராதனைகள் நடந்தது.
மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.