பதிவு செய்த நாள்
11
ஜன
2013
11:01
சேலம்: சேலம், அமானி கொண்டலாம்பட்டி சர்வசித்தி விநாயகர், முனீஸ்வரர், மாரியம்மன், காளியம்மன் கோவிலில், ஜனவரி, 27ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஜனவரி, 21 காலை, யாகசாலை முகூர்த்தகால் நடுதல், முலைப்பாரி போடுதல், கங்கனம் கட்டுதல் ஆகியன நடக்கிறது. ஜனவரி, 25 காலை, சுத்தி புண்யாஹம், கணபதி ஹோமம், நடத்தப்பட்டு பவானி கூடுதுறை காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீர் தீர்த்த குடம் எடுத்து வரப்படுகிறது. திருவிளக்கு பூஜை, சுத்தி புண்யாஹம், யஜமானார் சங்கல்பம், ரக்ஷõபந்தனம், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூர்ணாஹூதி, ப்ரவேச திக் பலி பூஜைகள் நடக்கிறது. ஜனவரி, 26 காலை மங்கள இசை திருமுறை சேவித்தல், ஆச்சாரியா வதனம், சுத்தி புண்யாஹம், த்வார பூஜை, வேதிகார்ச்சனை, இரண்டாம் கால யாக வேள்வி, த்ரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, சதுர்வேத பாராயணம் ஆகியன நடக்கிறது. மாலை, மூன்றாம் கால யாகவேள்விகள் துவங்குகிறது. த்ரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, மஹா அர்ச்சனை, மஹா நெய்வேத்யம், சதுர்வேத பாராயணம், த்ராவிட வேத பாராயணம், திருமுறை சேவித்து பிரசாதம் வழங்கப்படுகிறது. ஜனவரி, 27ல், மங்கள இசையுடன் ஆச்சார்யவதனம், சுத்தி புண்யாஹம், த்வார பூஜை, சகஸ்ர நாம அர்ச்சனை, நான்காம் கால யாக வேள்வி, த்ரவ்யாஹூதி, சதுர்வேத பாராயணம், த்ராவிட வேதபாராயணம், மஹா அர்ச்சனை, மஹா நைவேத்யம், யாத்ராதானம், யாக சாலையில் இருந்து கடம் புறப்படுதல் நடக்கிறது. தொடர்ந்து, கும்ப லக்கனத்தில், கும்பாபிஷேகம் நடக்கிறது. சுவாமிகளுக்கு மஹா அபிஷேகம், மஹா அலங்காரம், மஹா அர்ச்சனை மஹா நைய் வேத்யம், கோபூஜை, தச தரிசனம், தசதானம், மஹாதீபாராதனை ஆகியன நடக்கிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான கமிட்டியார் செய்துள்ளனர்.