புதுச்சேரி: புதுச்சேரியில் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளின் 6ம் ஆண்டு ஆராதனை விழா இன்று (12ம் தேதி) நடக்கிறது. புதுசாரத்திலுள்ள அன்னை வரவேற்பு இல்லத்தில் மாலை 6 மணியளவில், பல்லாண்டு, ஆண்டாள் திருப்பாவை பாராயணம், தேவநாத ராமானுஜதாசன் மூலம் நடக்கிறது. மாலை 6.45 மணிக்கு ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளின் அஷ்டோத்திரம் தீபாராதனை நடைபெற உள்ளது. தொடர்ந்து, இரவு 7 மணியளவில் "நாயகி சீர் பரவுவார் என்ற பட்டம் மதுரை நாயகி பிருந்தாவனம் உபதலைவர் கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்படுகிறது. இதைதொடர்ந்து தங்கமணி கிருஷ்ணமூர்த்தியின் இசையும் உரையும், நடன அரங்கமும், இரவு 9 மணிக்கு மங்கள தீபாராதனையும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.