புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள கம்பளி சுவாமி மடத்தில் கம்பளி ஞானதேசிக சுவாமிகளின் 139வது குருபூஜை விழா மற்றும் யோக மகரிஷி டாக்டர் சுவாமி கீதானந்த கிரி குரு மகராஜின் 19வது ஆராதனை விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கம்பளி சுவாமி மடாதிபதி யோகாச்சாரியா டாக்டர் ஆனந்தபாலயோகி கிரி தலைமை தாங்கினார். காலை 6.05 மணிக்கு கொடியுடன் வலம் வருதலும், கொடியேற்றமும் நடந்தது. 7.30 மணிக்கு இசையுடன் கூடிய கர்நாடக பக்திப்பாடல்கள், பஜனைகள், கீர்த்தனைகள், அபிஷேகம், ஆராதனை ஆகியவை நடந்தது. பகல் 12.15 மணிக்கு சுவாமிகளுக்கு மகா தீபாராதனையும், 12.30 மணிக்கு பக்தர்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.