Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலை கபாலீஸ்வரர் கோவில் தலபுராணம் அறுபத்து மூவர் விழாவில் பூம்பாவை உயிர்ப்பித்தல் அறுபத்து மூவர் விழாவில் பூம்பாவை ...
முதல் பக்கம் » துளிகள்
அதிகார நந்தியின் சிறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அதிகார நந்தியின் சிறப்பு

பதிவு செய்த நாள்

30 மார்
2026
12:03

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனிமாத பெருவிழாவின் மூன்றாம் நாள், அம்பாளுடன் சுவாமி அதிகார நந்தி வாகனத்தில் மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்படும் ஐந்து வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பது. கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்தி, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளதால், அதிகார நந்தி என்று பெயர் வந்தது.

சிவாலயங்களில் கொடிமரத்திற்கு அருகே இந்த அதிகார நந்தி அமைக்கப்பட வேண்டும் என, சிவ ஆகமங்கள் கூறுகின்றன.

கருடனை தடுத்த கதை

கயிலையில் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக, திருமால் கருட வாகனத்தில் சென்றார். சிவதரிசனத்திற்கு திருமால் சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். திருமால் திரும்பிவர காலதாமதம் ஆனது.

அப்போது, நந்திதேவன் அனுமதியின்றி கருடன் உள்ளே செல்ல முயன்றார். இதனால், இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார்.

தன்னைக் காக்க திருமாலை அழைத்தார். திருமால், சிவனிடம் வேண்ட, நந்தியிடம் கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் கோரினார் என்பது புராணம்.

எனவே, சிவ ஆலயங்களில் அதிகார நந்திக்கென வாகனம் உண்டு. திருவிழா காலங்களில் சிவபெருமான் இந்த அதிகார நந்தி வாகனத்தில் வீதியுலா வருகிறார்.

அதிகார நந்தி சேவையை தரிசிக்கும் பக்தர்கள் கைலாசத்தில் சிவ தரிசனம் செய்வதற்கு சமமானது என்பது ஐதீகம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar