Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி ...  பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்  பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்
எழுத்தின் அளவு:
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

பதிவு செய்த நாள்

01 ஏப்
2026
01:04

தொண்டாமுத்துார்: பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேரோட்டம் வெகுசிறப்பாக நடந்தது.


பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும் வேள்வி பூஜைகளும், திருவீதியுலாவும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. காலை, 8:00 மணிக்கு, நடராஜர் அபிஷேகம் மற்றும் தரிசன காட்சி நடந்தது. தொடர்ந்து மாலை, 4:30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில், வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி தாயார் எழுந்தருளினர். மாலை, 5:00 மணிக்கு, தேர் வடம்பிடித்தல் நடந்தது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், திருத்தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார். ‘வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அரோகரா’ என்ற கோஷத்துடன், பக்தர்கள், கோவிலை சுற்றி தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை, 6:00 மணிக்கு, மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கொடிக்கம்பத்தில் இருந்து கொடி இறக்குதலுடன், பங்குனி உத்திர தேர்த்திருவிழா நிறைவடைந்தது. இதில், ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar