கோவை: ஆவாரம்பாளையம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் முக்கிய நிகழ்வான நேற்று குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பூச்சாட்டு, கம்பம் நடுதல், கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை அடுத்து நேற்று குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை பூசாரிகள் மற்றும் பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர். கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். இந்து அமைப்புகள் பக்தர்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், தர்பூசணி ஆகியவற்றை வழங்கி கோடையின் தாகத்தை தனித்தனர். விழாவையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. குண்டம் விழாவை ஒட்டி 28 ம் ஆண்டு அன்னதான விழாவும் நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளுவிக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.