திருமலைக்குமாரசுவாமி கோயிலில் 18ம் தேதி தைப் பூச கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2013 11:01
கடையநல்லூர் : பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் தைப் பூச திருவிழா அன்னக்கொடியேற்றம் வரும் 18ம்தேதி மாலை நடக்கிறது. கடையநல்லூர் அருகேயுள்ள பண்பொழியில் திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.திருமலைக்கோயிலில் தற்போது மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலத்தை சேர்ந்த முருக பக்தர்களும் திருக்குமரனை வழிபட்டு செல்கின்றனர். கோயிலில் தைப்பூச திருவிழா வரும் 18ம்தேதி மலைக்கோயிலில் காலை 5.25மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கிறது. தொடர்ந்து மாலை 3மணிக்கு தைப்பூச திருவிழாவிற்கான திருக்குமரன் பண்பொழிக்கு அழைத்து வரப்படுகிறார். சிவன் கோயில் அருகில் மாலை 6மணிக்கு அன்னக்கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் கார்த்திக் மற்றும் மண்டகபடிதாரர்கள், கட்டளைதாரர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். தைப்பூச திருவிழாவில் சிறப்பு பெற்ற சண்?கர் எதிர்சேவை வரும் 24ம்தேதி நடக்கிறது. தொடர்ந்து 26ம்தேதி திருத் தேரோட்டம் நடக்கிறது.