மேல்மலையனூர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2013 11:01
செஞ்சி:மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.வழக்கத்தை விட நேற்று கூடுதலாக பக்தர்கள் வருகை தந்தனர். இவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.கடை வீதியிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பக்தர்கள் வருகை அதிகரித்ததால் செஞ்சி, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.