திருத்தணி: திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை ஷீரடி சாய்பாபா கோவிலில் பொங்கல் தினத்தை ஒட்டி, நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து, வேத விற்பன்னர்களால் யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, ஏழை விதவை பெண்கள், 75 பேருக்கு இலவச சேலை வழங்கப்பட்டது.மாலையில், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சாய் சீனிவாசன் தலைமையில் விழா குழுவினர் செய்து இருந்தனர்.