உடுமலை: உடுமலை ஜி.டி.வி., லே–அவுட் செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில், பங்குனி மாத காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை நடந்தது.
மாதந்தோறும் அனுஷ நட்சத்திரத்தன்று, காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை உடுமலையில் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், பங்குனி மாத அனுஷ நட்சத்திர பூஜை உடுமலை ஜி.டி.வி., லே – அவுட் செல்வவிநாயகர் கோவில் வளாகத்தில் நடந்தது. விக்னேச்வர பூஜையுடன் துவங்கி, ஸங்கல்பம், அனுஷ பிரதான பூஜை, மகா பெரியவர் அஷ்டோத்திர அர்ச்சனை நடந்தது. மேலும், வேத பாராயணம், காஞ்சி மட ஸ்வஸ்தி வசனம், சிவபுராணம், திருத்தொண்டர் தொகை, கோளறு திருப்பதிகம், பஞ்சபுராணம், திருப்புகழ் உள்ளிட்ட பாராயணங்கள் நடந்தது. தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. உடுமலை சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.