விழாவையொட்டி இம்மாதம், 24ம் தேதி கிராம சாந்தி நடக்கிறது. 25ம் தேதி சனிக்கிழமை கொடியேற்றம், 26ம் தேதி அன்ன வாகனம், 27ம் தேதி அனுமந்த வாகனம், 28ம் தேதி கருட வாகனம், 29ம் தேதி செங்கோதை அம்மன் அழைப்பு, 30ம் தேதி திருக்கல்யாண உற்சவம், புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. மே, 1ம் தேதி மாலை, 3:30 மணிக்கு யானை வாகன உற்சவம், 4:00 மணிக்கு சின்னத்தேர் உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மே மாதம், 2ம் தேதி பரிவேட்டை, குதிரை வாகன உற்சவமும், 3ம் தேதி சேஷ வாகன உற்சவமும் நடக்கிறது. 4ம் தேதி சந்தன சேவை, சாற்றுமுறை தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் செய்து வருகிறார்.