பதிவு செய்த நாள்
17
ஜன
2013
10:01
பழநியில் தேங்காய் விற்பனை "படுஜோர் : பூஜை பொருட்கள் செட் விலை ரூ.250
பழநி: பழநி கோயிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள், பூஜை செய்ய, பொருட்கள் வாங்குவதால், ஒரு தட்டின் விலை, 250 ரூபாய் வரை விற்கின்றனர். பழநி தைப்பூசத் திருவிழா, வரும், ஜன. 21ல் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளதால், பழநி மலைக்கோயிலுக்கு திருப்பூர், கோவை, மதுரை,சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர், தேனி, உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. மலைக்கோயிலில், 3:00 மணி முதல், 4:00 மணி நேரம் வரை காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர். பாதயாத்திரை வரும் பக்தர்கள், கிரிவீதியை வலம் வரும் போது, அப்பகுதிகளில் உள்ள கோயில்களிலும், பாத விநாயகர் கோவிலிலும், மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் நுழைவுப்பகுதியிலும் விடலைத் தேங்காய் உடைத்து வழிபடுகின்றனர். இதன் காரணமாக, தேங்காய் விற்பனை அதிகரித்துள்ளது. வெளிமார்க்கெட்டில், 4 முதல், 8 ரூõபய் வரை விற்கப்படும் தேங்காய் விலை, 15 முதல், 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வாழைப்பழம், தேங்காய், பூ, பத்தி, சூடம்,வெற்றிலை, பாக்கு, விபூதி, சந்தனம் அடங்கிய பூஜைதட்டு விலை, 250 ரூபாய் வரை விற்கப்படுகிறது.