Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் ... பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்ணாடம் கோவிலில் சித்திரை திருவிழா; 30 ஆண்டுகளுக்கு பிறகு மூன்று தேர்கள் வலம்
எழுத்தின் அளவு:
பெண்ணாடம் கோவிலில் சித்திரை திருவிழா; 30 ஆண்டுகளுக்கு பிறகு மூன்று தேர்கள் வலம்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2026
04:04

பெண்ணாடம்: பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில், 3 தேர்களை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 


பெண்ணாடத்தில், 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழாவில் விநாயகர், அம்மன், மூலவர் ஆகிய தேர்களை பக்தர்கள் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 3 தேர்களும் மர்மமான முறையில் எரிந்து சாம்பலானது. இதனால் தேர் திருவிழா நிறுத்தப்பட்டது.. பக்தர்களின் கோரிக்கையேற்று கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன் புதிதாக மூலவர் தேர் மட்டும் அமைக்கப்பட்டு, சித்திரை திருவிழா துவங்கியது. தொடர்ந்து, விநாயகர் மற்றும் அம்மன் தேர் புதிதாக அமைத்து கடந்த, 2 மாதங்களுக்கு முன் விநாயகர் தேரும், கடந்த வாரம் அம்மன் தேர் வெள்ளோட்டமும் நடந்தது. நடப்பாண்டிற்கான சித்திரை தேர் திருவிழா கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு 8:00 மணியளவில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா, சூரிய பிறை - சந்திர பிறை, அப்பருக்கு சூலப, இடப முத்திரையிடுதல், சமணரை கழுவிலேற்றல், பிச்சாண்டவர் உற்சவம் நடந்தது.  முக்கிய நிகழ்வான இன்று காலை 7:15 மணியளவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர், அம்மன், மூலவர் ஆகிய 3 தேர்களையும் பக்தர்கள் 4 ரத வீதிகள் வழியாக சிவ சிவ கோஷத்துடன் இழுத்துச் சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை தீர்த்தவாரி, நாளை கொடியிறக்கம், வரும் மே, 2ம் தேதி வசந்த உற்சவத்துடன் சித்திரை தேர் திருவிழா நிறைவடைகிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தியில் இன்றும் நாளையும் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.ஆந்திர மாநிலம், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar