வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் உண்டியல் கணிக்கை ரூ.21.51 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2026 11:04
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் உண்டியல் கணிக்கையாக பக்தர்கள் ரூ.21.51 லட்சம் வசூலானது.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா மே 12 முதல் 19 வரை நடக்கிறது. இதற்காக கோயில் வளாகத்தில் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள 12 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை 2025 டிச.,ல் எண்ணப்பட்டது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று மீண்டும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோயில் செயல் அலுவலர் சுபிதா மேற்பார்வையில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. தன்னார்வலர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர்,தேனி சவுராஷ்டிரா கல்லுாரி மாணவிகள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கையாக பணம் ரூ.21.51 லட்சம் இருந்தது. தங்கம் 20.80கிராம், வெள்ளி 325கிராம் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். காணிக்கை எண்ணும் பணியை துறை ஆய்வாளர் கார்த்திகேயன், மேலாளர் பாலசுப்பிரமணியன், கணக்காளர் பழனியப்பன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். திருவிழாவிற்காக கோயில் வளாகத்தில் கூடுதலாக 22 உண்டியல்கள் வைக்க உள்ளதாக ஹிந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.