Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பசுமை போர்வை போர்த்தியுள்ள ... நாக தோஷம் நீக்கும் சுயம்பு நாகப்பா கோவில் நாக தோஷம் நீக்கும் சுயம்பு நாகப்பா ...
முதல் பக்கம் » துளிகள்
ராய்ச்சூரின் பழமையான சிவன் கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராய்ச்சூரின் பழமையான சிவன் கோவில்

பதிவு செய்த நாள்

12 மே
2026
08:05

ராய்ச்சூர் கல்லுார் பகுதியில் ஸ்ரீ மார்கண்டேஷ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் இது. மிகவும் பழமையானது. 12ம் நுாற்றாண்டில் விஜயநகர பேரரசின் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில் கோவில் கட்டப்பட்டது. கிருஷ்ணதேவரா யர் இக்கோவிலை புனிதமாக கருதி வழிபட்டார். மேலும், சாளுக்கியர் ஆட்சியில் கோவில் புதுப்பிக்கப்பட்டதை கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன.

இக்கோவிலில் சிவபெருமான் மார்க்கண்டேஷ்வரர் ரூபத்தில் லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த கோவிலில் முன்னொரு காலத்தில், மார்க்கண்டேய முனிவர் சிவபெருமானை வேண்டி தியானம் மேற்கொண்டார். அப்போது, அவர் செய்த தவறுக்காக, அவரின் உயிரை பறிக்க எமதர்மர் வந்தார்.

எமதர்மனிடமிருந்து முனிவரை காப்பாற்ற, சிவபெருமான் மார்க்கண்டேஷ்வரர் ரூபத்தில் தோன்றினார். இதையடுத்து, அவ்விடத்தில் கோவில் கட்டப்பட்டதாக புராணங்களில் கூறப்பட்டு உள்ளது. இக்கோவிலில் உள்ள துாண்கள் இன்றும் பொலிவுடன் இருக்கின்றன. சிற்பங்கள், புராண கதைகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளன. திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டும் என பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை முன்வைக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், கோவிலில் தேங்காய் உடைத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

மஹா சிவராத்திரி அன்று இரவு முழுதும் சிறப்பு பூஜைகள் நடக்கும். பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இச்சமயத்தில் கோவிலில் விழாக்கோலம் ஏற்படும்.

கோவில் காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.

பஸ்: ராய்ச்சூர் பஸ் நிலையத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து ஆட்டோ மூலம் கோவிலை அடையலாம்.

ரயில்: ராய்ச்சூர் ரயில் நிலையத்திற்கு வர வேண்டும். அங்கிருந்து டாக்சி மூலம் கோவிலை அடையலாம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar