Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மக்களை காக்க கோகர்ணாவுக்கு ... ராவணன் சிவன் பாதத்தில் விழுந்து வழிபட்ட இடம் ராவணன் சிவன் பாதத்தில் விழுந்து ...
முதல் பக்கம் » துளிகள்
சக்தி வாய்ந்த மலலி லட்சுமி தேவி கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சக்தி வாய்ந்த மலலி லட்சுமி தேவி கோவில்

பதிவு செய்த நாள்

19 மே
2026
07:05

பொதுவாக கோவில்களில் லட்சுமி தேவிக்கு முன் தாமரை மலர், சுத்தமான சங்கு, வெள்ளி நாணயம், நவதானியங்கள் வைத்து பூஜை செய்வதை பார்த்து இருப்போம். ஆனால், இறைச்சியை நைவேத்தியமாக படைத்து வழிபடும், சக்தி வாய்ந்த கோவிலாக மலலி லட்சுமி தேவி கோவில் உள்ளது.

ஹாசனின் ஹொளேநரசிபுரா மலலி கிராமத்தில் இந்த கோவில் அமைந்து உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலை விவசாயிகள் கட்டினர் என்று வரலாறு சொல்கிறது. 300 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் சந்தைக்கு சென்று விட்டு மாடுகளுடன் திரும்பி வரும் போது, ஒரு இடத்தில் களைப்பாற துாங்கி உள்ளனர். மாடுகளையும் மரத்தில் கட்டி உள்ளனர்.

விவசாயிகள் கண் விழித்து பார்த்த போது, மாடுகள் வயிறு வீங்கி அவற்றால் எழுந்து நிற்க முடியவில்லை. அப்போது அங்கு கொரவஞ்சி வேடத்தில் தோன்றிய பெண் ஒருவர், விவசாயிகளிடம், லட்சுமி தேவிக்கு கோவில் கட்டி வழிபடுவதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்; மாடுகளின் வயிறு வீக்கம் குறைந்து விடும் என்று கூறி விட்டு மாயமாகி உள்ளார்.

கொரவஞ்சியின் சொல்படி விவசாயிகளும், லட்சுமி தேவிக்கு கோவில் கட்டி வழிபடுவதாக வேண்டி கொண்டதால், மாடுகளின் வயிறு வீக்கம் வற்றி போனது. தாங்கள் வேண்டி கொண்டபடி லட்சுமி தேவி சிலையை வைத்து, விவசாயிகள் சிறிய கோவில் கட்டியதாகவும், பிற்காலத்தில் ஊர் மக்கள் கோவிலை விரிவுபடுத்தியதாகவும் வரலாறு சொல்கிறது.

இந்த கோவிலுக்கு வந்து லட்சுமி தேவியை வேண்டி கொண்டு, தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறினால் பக்தர்கள் ஆடு, கோழிகளை பலி கொடுத்து இறைச்சி உணவு சமைத்து, லட்சுமி தேவிக்கு நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர்.

செவ்வாய், வெள்ளி, அமாவாசை தினத்தன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவில் நடை தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்து இருக்கும். மேலும் தகவலுக்கு 98801 61166 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

எப்படி செல்வது?

* பெங்களூரில் இருந்து 172 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.
* மெஜஸ்டிக்கில் இருந்து ஹொளேநரசிபுரா சென்று அங்கிருந்து 19 கி.மீ., துாரத்தில் உள்ள கோவிலுக்கு ஆட்டோ, வாடகை காரில் செல்லலாம்.
* ரயிலில் சென்றால் ஹொளேநரசிபுராவில் இறங்கி கொள்ளலாம்.
* சொந்த வாகனத்தில் செல்வோர் வாகனங்களை கோவில் முன்பு நிறுத்தும் வசதி உள்ளது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar