சென்னையில் அவசியம் தரிசிக்க வேண்டிய முருகன் கோவில்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2026 11:05
முருகப் பெருமான் பக்தர்கள் முருகன் கோவில்கள் எங்கெல்லாம் இருக்கின்றன என தேடி தேடி சென்று வழிபடுவது வழக்கம். அப்படி சென்னையில் வசிக்கும் முருகன் பக்தர்கள், சக்தி வாய்ந்த முருகன் கோவில்களுக்கு செல்ல வேண்டும் என விரும்புபவர்களுக்காக சென்னையில் அவசியம் ஒரு முறையாவது சென்று வணங்க வேண்டிய 12 முருகன் கோவில்கள் பற்றியும், அவற்றின் சிறப்புகள் பற்றியும் இங்கு தெரிந்து கொள்ளலாம். இங்கு சென்று முருகனை தரிசித்து விட்டு வந்தாலே வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும் என சொல்லப்படுகிறது.
முருகப் பெருமானை வழிபடுபவர்களின் எண்ணிக்கை சமீப காலமாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த ஆண்டுகளில் முருகனின் கோவில்களையும், முருகனின் மந்திரங்கள், முருகன் பற்றிய பாடல்களையும் தேடி தேடி படிப்பவர்கள், தரிசிப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதற்கு காரணம் கலியுகத்தில் கண் கண்ட கடவுளாக கந்தக் கடவுள் விளங்குவது தான். இன்றும் பல பக்தர்களின் வாழ்க்கையில் முருகப் பெருமான் அதிசயங்கள் நிகழ்த்துவதும், தேடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்ப்பதும், பலருக்கும் கனவிலும் நினைவிலும் வந்து காட்சி கொடுக்கும் அற்புதங்கள் இன்றும் நடப்பதாகும். முருகப் பெருமான் என்றாலே ஆறுபடை வீடுகள் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். இந்த ஆறுபடை வீடுகள் தவிர தமிழகத்தில் பல சக்தி வாய்ந்த முருகன் கோவில்கள், பல பகுதிகளில் அமைந்துள்ளன. முருகனின் திருக்கரங்கள் 12. இந்த 12 திருக்கரங்களை போல் சென்னை மற்றும் அதற்கு மிக அருகில் அமைந்துள்ள மிகவும் சக்தி வாய்ந்த 12 முருகன் கோவில்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.