Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விழுப்புரம் சங்கர மடத்தில் ... திருக்கோஷ்டியூர் வசந்த உத்ஸவம்: இன்று கஜேந்திர மோட்சம் திருக்கோஷ்டியூர் வசந்த உத்ஸவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மஸ்தலாவுக்கு வருகை தந்த துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 தர்மஸ்தலாவுக்கு வருகை தந்த துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன்

பதிவு செய்த நாள்

31 மே
2026
08:05

 மங்களூரு; துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற தர்மஸ்தலாவின் மஞ்சுநாத சுவாமி கோவிலுக்கு இன்று வருகை தந்தார். சிறப்பு பூஜைகள் நடத்தினார்.

துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வரலாற்று பிரசித்தி பெற்ற தர்மஸ்தலாவுக்கு, இன்று காலை வருகை தந்த அவர், மஞ்சுநாத சுவாமி கோவிலுக்கு சென்றார். அவருடன் கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டும் வந்திருந்தார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், பூர்ண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை கோவில் அறங்காவலர் வீரேந்திரஹெக்டே வரவேற்றார். அதன்பின், துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், மஞ்சுநாதரை தரிசித்தார். சிறப்பு பூஜைகள் நடத்தி, காணிக்கை அர்ப்பணித்தார். சிறிது நேரம் கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்தார்.

தர்மஸ்தலாவின் புனிதம், சுற்றுச்சூழல் துாய்மை, ஒழுங்கு முறையுடன் நடக்கும் அன்னதானம், வசதியை வெகுவாக பாராட்டினார். கல்வி, சுகாதாரம், கிராம மேம்பாட்டுக்கு, கோவில் நிர்வாகம் செய்யும் சேவைகளை புகழ்ந்தார். துணை ஜனாதிபதி வருகை காரணமாக, மஞ்சுநாத சுவாமி மற்றும் சுற்றுப்புறங்களில் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாமல், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. துணை ஜனாதிபதி கூறுகையில், ‘‘மாநிலம் மற்றும் நாட்டின் நலனுக்காக, மக்களின் நன்மைக்காகவும் மஞ்சுநாத சுவாமியிடம் பிரார்த்தனை செய்தேன்,’’ என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar