Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி விசாகம்; முருகனை வழிபட ... தர்மத்தின் அடையாளமாக  வீற்றிருக்கும் தர்மேஸ்வரா தர்மத்தின் அடையாளமாக ...
முதல் பக்கம் » துளிகள்
மன்னரின் கனவில் தோன்றிய வெங்கடேஸ்வரர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மன்னரின் கனவில் தோன்றிய வெங்கடேஸ்வரர்

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2026
10:06

கொப்பால் மாவட்டம், குஷ்டகி தாலுகாவின் ஹனுமசாகர் கிராமத்தில் சிறிய மலையில், ஹனுமசாகர் கோட்டை உள்ளது. இந்த கோட்டைக்குள் 400 ஆண்டுகள் பழமையான அபிநவ திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் உள்ளது.

கட்டபுரா என்று அழைக்கப்பட்ட இப்பகுதி, ஸ்ரீமந்த திம்மப்பய்யா தேசாய் ஆட்சியின் கீழ் இருந்தது. இவர், வெங்கடேஸ்வரரின் தீவிர பக்தர். ஆண்டுதோறும் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரரை தரிசிக்க, கால்நடையாக சென்று வந்தார்.

ஆனால் வயதான பின், அவரால் நடக்க முடியவில்லை. ஆண்டுதோறும் வெங்கடேஸ்வரரை தரிசித்து வந்த எனக்கு, இனி அவரை தரிசிக்க முடியாதோ என்று வேதனை அடைந்தார்.

அன்றைய தினம் அவரின் கனவில் தோன்றிய வெங்கடேஸ்வரர், ‘ஹனுமசாகர் மலையில் உறங்கும் பசுவின் அருகில் என் பாதத்தை காண்பாய். இதை தரிசித்தாலே, திருப்பதியில் என்னை தரிசித்த பலன் கிடைக்கும்’ என்று கூறிவிட்டு மறைந்தார்.

மறுநாள் காலை, தன் குடும்பத்தினரிடம் கூறி, கடவுள் கூறிய ஹனுமசாகர் மலைக்கு சென்று பார்த்தபோது, ‘பசுவின் அருகில் கால் பாதத்தை கண்டு ஆச்சரியப்பட்டனர். சில நாட்கள் இந்த பாதத்தை தரிசித்து வந்தார்.

அப்போதும், ஸ்ரீமந்த திம்மப்பய்யா தேசாய்க்கு மனம் ஒப்பவில்லை. வெங்கடேஸ்வரரின் முழு வடிவத்தை காண வேண்டும் என்று எண்ணினார். மீண்டும் அவரின் கனவில் தோன்றிய வெங்கடேஸ்வரர், ‘குஷ்டகி டவுனில் கலபாவி கிராமத்தில், துணி துவைக்கும் கல்லில் என் உருவம் உள்ளது’ என்று கூறினார்.

அதன்படி, ஸ்ரீமந்த திம்மப்பய்யா தேசாயும் அங்கு சென்று அந்த கல்லை மீட்டு வந்தார். மலையில் இக்கல்லை வைத்து, ‘அபிநவ திருப்பதி’ என்று கோவிலுக்கு பெயர் சூட்டினார்.

அன்று முதல் இக்கோவிலுக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். கோட்டையின் நுழைவாயில் பிரமாண்டாக அமைக்கப்பட்டு உள்ளது. கோவிலில் தெப்பக்குளமும் அமைந்துள்ளது.

எப்படி செல்வது?

ரயிலில் செல்வோர், கொப்பால் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 80 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு, பஸ், டாக்சி மூலம் செல்லலாம்.

பஸ்சில் செல்வோர், ஹனுமசாகர் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து, 2 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு ஆட்டோ, டாக்சியில் செல்லலாம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar