பெருமாள் கோவில்களில் சடாரி (சடகோபம்) என்பது, இறைவனின் திருவடிகளாகக் கருதப்படுகிறது. நம்மிடம் உள்ள அகந்தை, கர்வம் ஆகியவற்றை அழித்து, இறைவனின் திருவடிகளை நம் தலையில் தாங்கும் பணிவையும், பக்தியையும் உணர்த்துவதற்காகவே, சடாரி தலையில் வைக்கப்படுகிறது. சடாரிக்கு சடகோபம் என்ற பெயரும் உண்டு. நம்மாழ்வார் பெருமாளின் திருவடிகளையே சதா சர்வகாலமும் நினைத்திருந்ததால், அவரது நினைவாகவே சடாரி உருவானது. துளசி தீர்த்தம் அருந்திய பின்பே, வாங்க வேண்டும். இது, உடலையும் மனதையும் தூய்மையாக்குகிறது.