Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவையில் ஒரு திவ்யதேசம் உலகளந்த ... சடாரி வைப்பது ஏன்? சடாரி வைப்பது ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
இது என்ன பிரமாதம்... இப்போதே எடுத்துக்கொள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இது என்ன பிரமாதம்... இப்போதே எடுத்துக்கொள்

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2026
11:06

முன்னொரு காலத்தில், பூமியில், மன்னர் மகாபலி சக்கரவர்த்தி, தர்ம நியாயங்களுக்கு கட்டுப்பட்டு ஆட்சி செய்து வந்தார். அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரின் தூண்டுதலால், தேவர்களை துன்புறுத்த தொடங்கினார். அதர்மங்களில் ஈடுபட தொடங்கினார். விரக்தியடைந்த தேவர்கள், மகாவிஷ்ணுவை சரணடைந்து, தங்களை காத்தருள வேண்டினர். பகவானும், அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க புதிய அவதாரம் எடுத்து வரமளித்தார்.

சப்தரிஷிகளில் ஒருவரான காசியபர் அதிதி தம்பதியினர், புத்திர பாக்கியம் வேண்டி மகாவிஷ்ணுவை நோக்கி புத்திர காமகோஷ்டி யாகம் செய்தனர். அவர்களுக்கு தானே புத்திரனாக பிறப்பதாக வரமளித்தார் விஷ்ணு. அவர்களுக்கு குட்டை வடிவம் கொண்ட வாமனராக மகனாக பிறந்தார். பிரம்மச்சரியம் மேற்கொண்டார். பின், மகாபலி சக்கரவர்த்தியிடம் சென்று பூமி தானம் கேட்டார். மகாபலியும், வாமனனின் குட்டையான உருவம் கண்டு, எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன்; எடுத்துக் கொள் என்றார். அவரோ, என் காலடியில் மூன்று அடி நிலம் போதும் என்றார். அரசனும், இது என்ன பிரமாதம், இப்போதே எடுத்துக்கொள் என, தாரை வார்த்து தர தயாரானார்.
இதை கண்ட சுக்ராச்சாரியார், வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்து, மன்னனிடம் தெரிவித்து, தானம் கொடுப்பதை தடுக்க முயன்றார். மன்னனோ, கொடுத்த வாக்கை காப்பாற்றியே தீருவேன் எனச் சொல்லி, வந்திருப்பது மகாவிஷ்ணு தான் என்பதை அறிந்தாலும், அவருக்கு தானம் கொடுப்பது பெருமையாக கருதி, தாரை
வார்க்க தொடங்கினார். நிலைமை தன்னை மீறி போய் விட்டதை கண்ட அசுர குரு சுக்ராச்சாரியார், அது நடக்காமல் தடுக்க, தாரை வார்த்துக் கொடுக்கும் கமண்டலத்தின் துவாரத்தை அடைக்க, சிறு வண்டாக மாறி உள்ளே சென்று நீர் வராமல் அடைத்து நின்றார்.

இதையறிந்த வாமனன், தன்னிடமிருந்த தர்ப்பை புல்லால் துவாரத்தில் குத்தினார். கண்ணில் குத்தியதால் வலி பொறுக்காமல் வெளியே வந்தார் சுக்ராச்சாரியார். மகாபலியும், கமண்ட நீரில் வாமனனுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார்.

அடுத்த நொடியில், விண்ணுக்கும், மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்தார். ஒரு அடியில் பூமியை அளந்தார். மற்றொரு அடியில் வானை அளந்தார். மூன்றாவது அடிக்கு, இடம் எங்கே என்று மகாபலியிடம் கேட்டார். மகா பலியோ, வைகுண்ட வாசனே வாமனனாய் உருவெடுத்து, திருவிக்கிரம நாராயணனாய் கட்சி
தந்த அவதார மூர்த்திக்கு, தன்னுடைய தலையை காட்டி, சரணாகதி அடைந்தார். திருமாலும் தனது அடியை அவரது தலையில் வைத்தவுடன், பாதாள உலகிற்கு சென்றார் மகாபலி. தேவர்கள், மகாவிஷ்ணுவின் அவதார நோக்கம் நிறைவுற்றதை எண்ணி, பூமாரி பொழிந்தனர். உள்ளம் மகிழ்ந்து ஆனந்தமடைந்தனர்.

விண்ணுலகை நோக்கி சென்ற திருமாலின் திருவடியை, பிரம்மன் தன்னுடைய சத்திய லோகத்தில் கண்டார். தனது பாக்கியமாக கருதிய அவர், கமண்டல நீரைக் கொண்டு பாத பூஜை நடத்தினார்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல், நெலமங்களா தாலுகா, பைரஷெட்டிஹள்ளி கிராமம் கொல்லஹள்ளி பகுதியில் பைலாஞ்சநேய சுவாமி ... மேலும்
 
temple news
துமகூரு நகரில் இருந்து, 3 கி.மீ., தொலைவில், பழமையான ஷெட்டிஹள்ளி ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar