Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: ஆனி ராசி பலன் மிதுனம் : ஆனி ராசி பலன் மிதுனம் : ஆனி ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
ரிஷபம் : ஆனி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ரிஷபம் : ஆனி ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2026
12:06

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்


நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் குழப்பமின்றி செயல்பட வேண்டிய மாதமாகும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் ஆத்ம காரகன் சூரியன் சஞ்சரிப்பதால் மனதில் தேவையற்ற சிந்தனைகள், குழப்பங்கள் ஏற்படும். வார்த்தைகளில் தடுமாற்றம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். குடும்பத்தில் பிரச்னைகள் தோன்றும் என்றாலும், குருவின் பார்வைகள் சப்தம, பாக்ய, லாப ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு வரன் அமையும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உறவினர் ஆதரவு அதிகரிக்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி காண முடியும். மாணவர்களுக்கு மனம் தெளிவாகும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நன்மை அளிக்கும். பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்து செல்வது அவசியம். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்புகள் வரும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகும்.

சந்திராஷ்டமம்: ஜூன் 29.

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 19, 24, 28. ஜூலை 6, 10, 15.


பரிகாரம்: நடராஜரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


ரோகிணி

பிறப்பின் பயனை அடைய வேண்டும், வாழ்வில் உயர்ந்த இடத்தைத் தொட வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். உங்களுக்கு தர்ம கர்மாதிபதியான சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் மற்றும் தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு ஏற்பட்ட பயம் போகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போர் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குருப்பார்வையும் லாப ஸ்தானத்திற்கு கிடைப்பதால் தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். சேமிப்பும், வசதி வாய்ப்புகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த போராட்ட நிலை விலகி நிம்மதி உண்டாகும். நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம்தரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். திருமண வயதினருக்கு பிடித்தமான வரன்வரும். ஜூன் 19 முதல் ராசிக்குள் உங்கள் விரயாதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதால் செலவுகளில் கவனம் தேவை. முடிந்தவரை அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நன்மையாகும். ஒவ்வொரு வேலையிலும் பின்விளைவுகள் பற்றி யோசித்து முடிவிற்கு வருவது அவசியம். உடல் நிலையில் அவ்வப்போது சில பிரச்னைகள் தலைகாட்டும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும். குடும்பத்தினர் ஆலோசனைகள் பிரச்னைகளில் இருந்து இக்காலத்தில் உங்களைப் பாதுகாக்கும். மாணவர்கள் குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது அவசியம்.

சந்திராஷ்டமம்: ஜூன் 30.

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 20, 24, 29. ஜூலை 2, 6, 11, 15.


பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.


மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்: வேகமும் விவேகமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். தைரிய வீரிய காரகன் செவ்வாய் ஜூன் 19 முதல் ராசிக்குள் சஞ்சரிப்பதால் பரபரப்பாக செயல்படுவீர்கள். திட்டமிடாமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். மனம் குழப்பம் அடையும் என்றாலும், ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். உறவினர் ஆதரவு கிடைக்கும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். உங்கள் தன குடும்பாதிபதி புதன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம்வரும் வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வரவு செலவில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். யோகக்காரகன் ராகு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். முதலீட்டிற்கேற்ற லாபம் கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கும் சேமிப்பு அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் லாபம் தரும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் ஏற்படும். வேலையின் காரணமாக குடும்பம் ஓரிடம் தான் ஓரிடம் என்று வசிக்க வேண்டிய நிலையும் ஒரு சிலருக்கு உருவாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நன்மையாகும். பெண்களுக்கு நீண்டநாள் கனவு நனவாகும்.

சந்திராஷ்டமம்: ஜூலை 1.

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 18, 24, 27. ஜூலை 6, 9, 15.


பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar