Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம் : ஆனி ராசி பலன் மகரம் : ஆனி ராசி பலன் மகரம் : ஆனி ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
தனுசு : ஆனி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தனுசு : ஆனி ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2026
01:06

தனுசு


மூலம்

நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஞான மோட்சக்காரகன் கேது பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரியோரின் ஆதரவு கிடைக்கும். நீண்டநாளாக உங்களை சங்கடப்படுத்தி வந்த பிரச்னைகள் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் நிலை உருவாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கும் ஆத்மகாரகன் சூரியனால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். வியாபாரிகள் சிலர் செய்துவரும் தொழிலை இடமாற்றம் செய்வீர்கள். உங்கள் லாபாதிபதி சுக்கிரன் மாத தொடக்கத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியான நிலையும் இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பொன் பொருள் சேரும். ஜூன் 6 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் பிறருக்கு உதவி செய்யக்கூடிய நிலை உண்டாகும். வியாபாரம் தொழிலில் ஆதாயம் கூடும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அர்த்தாஷ்டம சனிக்கு குருப்பார்வை உண்டாவதால் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். தாய்வழி உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். தாயாரின் உடல்நிலை சீராகும். உங்களுக்குள் இருந்த மந்த நிலை நீங்கும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை உருவாகும். கையில் பணம் புரளும். விவசாயிகளுக்கு நெருக்கடி நீங்கும். மாணவர்கள் தவறான நட்புகளை விட்டு விலகுவது நன்மையாகும்.

சந்திராஷ்டமம்: ஜூன் 17, 18. ஜூலை 14, 15.

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 16, 21, 25, 30. ஜூலை 3, 7, 12, 16.


பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.


பூராடம்

மனசாட்சியின்படி வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் லாபாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். பணவரவு அதிகரிக்கும். தம்பதிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும் ய. நோய் நொடி என்றிருந்த நிலை மாறும். குருப்பார்வைகளால் மருத்துவம் மற்றும் வீண் செலவுகள் குறையும். மனதில் நிம்மதி இருக்கும். உறக்கமின்றி தவித்தவர்கள் நிலை மாறும். ஆரோக்கியம் சீராகும். தைரிய வீரிய சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நினைத்த வேலைகளை நடத்தி முடிக்க முடியும். தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு பணியாளரின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஜூன் 19 முதல் உங்கள் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்குள் ஒரு அசாத்திய துணிச்சல் ஏற்படும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். வியாபாரம் மற்றும் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும்.

உணவகம், மருத்துவம், விவசாயம், பில்டர்ஸ், ரியல் எஸ்டேட் சார்ந்த தொழில்கள் முன்னேற்றம் அடையும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி நீங்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். மாணவர்கள் ஆசிரியர் ஆலோசனையின்படி செயல்படுவது நன்மையாகும்.

சந்திராஷ்டமம்: ஜூன் 18, 19. ஜூலை 15, 16.

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 21, 24, 30. ஜூலை 3, 6, 12.


பரிகாரம்: ஆண்டாள் அழகரை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.


உத்திராடம் 1 ம் பாதம்

அறிவாற்றலுடன் முன்னேற்றப் பாதையில் நடைபோட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் உங்கள் நிலையில் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீரென இடமாற்றம் ஏற்படும். குடும்பம் ஓரிடம் தான் ஓரிடம் என்று வாழ வேண்டிய நிலையும் சிலருக்கு உண்டாகும். ராசிநாதன் குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் திட்டமிடாமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் இழுபறி உண்டாகும் என்றாலும் குரு பகவானின் பார்வைகள் விரய மற்றும் குடும்ப சுக ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கையில் பணம் புரளும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். மனதில் நிம்மதி இருக்கும். சிலருக்கு கண் பார்வையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அர்த்தாஷ்டம சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். சனிப்பார்வையால் உங்களுக்குண்டான நெருக்கடி, மந்தநிலை நீங்கும். பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் வார்த்தைகளில் நிதானம் காப்பதும் நன்மையாகும். உடன் பணிபுரிபவரிடம் குடும்ப ரகசியங்களை வெளியிட வேண்டாம். அரசியல்வாதிகள் தலைமையின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு நடப்பது நன்மையாகும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு முன்பாக சந்தை நிலவரத்தை தெரிந்து செயல்படுவது அவசியம் என்றாலும், மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்களிடம் மகிழ்ச்சி இருக்கும். பொன் பொருள் சேரும். புதிய வாகனம் வீட்டிற்கு வரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

சந்திராஷ்டமம்: ஜூன் 19. ஜூலை 16.

அதிர்ஷ்ட நாள்: ஜூன் 21, 28, 30. ஜூலை 1, 3, 10, 12.


பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடங்கள் விலகும். வாழ்வில் வளம் உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar