Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் : ஆடி ராசி பலன் துலாம் : ஆடி ராசி பலன் துலாம் : ஆடி ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கன்னி : ஆடி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கன்னி : ஆடி ராசி பலன்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2026
11:07

கன்னி: உத்திரம் 2, 3, 4 ம் பாதம்


தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் யோகமான மாதமாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஆத்ம காரகன் சூரியனால் உங்கள் செல்வாக்கு உயரும். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் இல்லாமல் போகும். வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அரசுவழி வேலைகளில் லாபம் வரும்.  அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். புதிய தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடிவரும். கடந்த காலத்தில் மெமோ வழக்கு இடைநீக்கம் என்று சங்கடங்களை சதித்தவர்களுக்கு அவற்றிலிருந்து மாற்றம் ஏற்படும். வரவேண்டிய சலுகைகள் வரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உறவினருடன் ஏற்பட்ட பகை விலகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கண்டக சனி வக்கிரம் அடைந்திருப்பதால் நட்பு வட்டத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.  விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும்.

சந்திராஷ்டமம்: ஆக. 4, 5.

அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19, 23, 28. ஆக. 1, 10, 14.


பரிகாரம்: தண்டாயுதபாணியை வழிபட மனதில் நிம்மதி உண்டாகும்.


அஸ்தம்


திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் யோகமான மாதமாகும். உங்கள் ராசிநாதனான புதன் ஜூலை 31 வரை கேந்திர பலத்துடன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் கையில் பணம் புரளும்.  எடுத்த வேலைகள் வெற்றியாகும். செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும்.  வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஆக. 1 முதல் லாப ஸ்தானத்திற்கு புதன் பெயர்ச்சியாவதால் வரவு அதிகரிக்கும். பழைய முதலீட்டில் இருந்து ஆதாயம் வரும்.

நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மதிப்பும் மரியாதையும் உண்டாகும். உங்கள் தன குடும்பாதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் ஆடை ஆபரணம் வாகனம் என்று சேரும். சிலர் நவீன பொருட்கள் வாங்குவீர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தடைபட்ட பதவி உயர்வு தேடிவரும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் சுமூகமான நிலை இருக்கும். பெண்களுக்கு உடல்நிலையும் மனநிலையும் ஆரோக்கியமாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். ஆக. 9 முதல் குரு லாப ஸ்தானத்தில் நேர்கதியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் உங்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை அடையக்கூடிய நிலையும்  ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். நண்பர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும்.

சந்திராஷ்டமம்: ஆக. 5, 6.

அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20, 23, 29. ஆக. 2, 11, 14.


பரிகாரம்: திங்களூர் சந்திரனை வழிபட மனம் தெளிவடையும். பயம் விலகும்.


சித்திரை 1, 2 ம் பாதம்


உழைப்பதற்கு தயங்காத உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் பொறுமையாக செயல்பட வேண்டிய மாதமாகும். தைரிய வீரிய காரகன் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமற்று இருப்பதால் எடுக்கின்ற வேலைகள் இழுபறியாகும். முதலீட்டிற்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காமல் போகும். சிந்திக்காமல் சில வேலைகளில் இறங்கி அங்கு சங்கடத்திற்கு ஆளாக நேரும். பணமும் நேரமும் விரயமாகும் என்பதால் அனைத்திலும் நிதானம் காப்பது நன்மையாகும். எந்தவொரு வேலையாக இருந்தாலும் சரியான திட்டமிடுதல் என்பது இந்த நேரத்தில் வேண்டும். அதே நேரத்தில், சூரியன் லாப ஸ்தானத்திலும், யோகக்காரகன் ராகு சத்ரு ஜெய ஸ்தானத்திலும், அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனும், வித்யாகாரன் புதனும் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் எந்தவிதமான பிரச்னைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் எதிர்கொண்டு உங்களால் வெற்றிபெற முடியும். சுய அறிவும் ஆற்றலும் நினைத்த இடத்திற்கு உங்களைக் கொண்டுச்சென்று நிறுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வியாபாரத்தில் சிறு சிறு தடைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் சமாளித்து லாபம் காண்பீர்கள். குடும்பத்திலும் நிம்மதியான நிலை இருக்கும். உறவுகளுக்கும் உங்களுக்கும் இணக்கமான நிலை ஏற்படும். வரவேண்டிய பணம் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். அரசியல் வாதிகளுக்கு பட்டம் பதவி செல்வாக்கு அந்தஸ்து ஏற்படும். திருமண வயதினருக்கு மாதத்தின் பிற்பகுதியில் தகுதியான வரன்வரும். வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் ஆதாயம் கூடும். மூத்த குடிமக்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் இருக்கும்.

சந்திராஷ்டமம்: ஆக. 6.

அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 23, 27. ஆக. 5, 9, 14.


பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar