Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம் : ஆடி ராசி பலன் கன்னி : ஆடி ராசி பலன் கன்னி : ஆடி ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
சிம்மம் : ஆடி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிம்மம் : ஆடி ராசி பலன்

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2026
11:07

சிம்மம்: மகம்


வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்த உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நிதானித்து செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் ஞான மோட்சக்காரகன் கேது சஞ்சரிப்பதால் மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். எந்த ஒன்றிலும் நிம்மதி என்பது இல்லாமல் போகும். குடும்பத்திலும் புயல் வீசும். கணவன் மனைவிக்குள் இடையே விரிசல் ஏற்படும். நல்லவர்கள் என்று வீடுவரை அழைத்து வரப்பட்டவர்களால் குடும்பத்திற்குள் குழப்பம் உண்டாகும் என்றாலும், அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்துவரும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் நீங்கும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த பணம்வரும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உழைப்பாளர்களுக்கு வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும் ஆக. 9 வரை அஸ்தமனம் அடைந்திருப்பதால் செலவுகள் கட்டுப்படும். அலைச்சல் குறையும். மனதில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு மனதளவில் ஏற்பட்ட குழப்பம் விலகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு மாதத்தின் பிற்பகுதி யோக காலமாக இருக்கும். கையில் பணம் புரளும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும்.

சந்திராஷ்டமம்: ஆக. 2, 3.

அதிர்ஷ்ட நாள்: ஜூலை 16, 19, 25, 28. ஆக. 1, 7, 10, 16.


பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடங்கள் விலகும்.


பூரம்: வாழ்க்கையில் அர்த்தம் இருக்க வேண்டும் என நினைக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும். ஆக. 1 வரை ஜென்ம ராசிக்குள்ளும் அதன் பிறகு இரண்டாம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். பணப் புழக்கத்தை ஏற்படுத்துவார். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலையினை உருவாக்குவார். பொன் பொருள் புதிய வாகனம் என்ற கனவை நனவாக்குவார். எடுக்கின்ற முயற்சிகளை வெற்றியாக்குவார். இக்காலத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதும். விரய குரு அஸ்தமனம் ஆகி இருப்பதும் கடந்த மாதத்தில் உங்களுக்கிருந்த நெருக்கடிகளையும் போராட்டங்களையும் பிரச்னைகளையும் இல்லாமல் செய்யும். உங்கள லாபாதிபதி புதனும் ஜூலை 31 வரை லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். வீடு, மனை வாங்குவதற்காகவும் தொழில் தொடங்குவதற்காகவும் வங்கியில் கடனாக கேட்டிருந்த பணம் கைக்கு வரும் என்றாலும், ராசிநாதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவுகளில் கூடுதல் கவனம் தேவை. பண விவகாரத்தில் எச்சரிக்கையாக இருப்பது நன்மையை உண்டாக்கும். அறிமுகம் இல்லாதவரை நம்பி எந்தவொரு முயற்சியிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். நண்பர்கள் விஷயத்தில் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருப்பது நன்மையை உண்டாக்கும். கூட்டுத் தொழிலும் இந்த நேரத்தில் சங்கடத்தை உண்டாக்கும் என்பதால் ஒவ்வொன்றிலும் திட்டமிட்டு செயல்படுவது உங்களுக்கு நன்மையாகும். பெண்கள் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்காமல் எந்த முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். சிறு தொழில் செய்து வருபவர்களுக்கு லாபநிலை இருக்கும். விவசாயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் ஆக. 1 முதல் படிப்பில் கவனமாக இருப்பது நன்மையாகும்.

சந்திராஷ்டமம்: ஆக. 3, 4.

அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19, 24, 28. ஆக. 1, 6, 10, 15.


பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.


உத்திரம் 1 ம் பாதம்


தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். ராசிநாதன் சூரியன் மாதம் முழுவதும் விரயஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்த மாதத்தில் கிடைத்த யோகப்பலன்களில் மாற்றம் ஏற்படும். சரளமாக வந்து கொண்டிருந்த வரவில் தடை ஏற்படும். செலவு பல வழியிலும் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் வந்து சோதனைக்கு ஆளாக்கும். அவசர தேவைகளுக்காக கையிருப்பு கரையும். கையில் இருப்பதை வைத்து சமாளிக்க வேண்டிய நிலைவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடும். அலைச்சல் அதிகரிக்கும். மேல் அதிகாரியுடன் இணக்கமற்ற நிலை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு போராட்ட மயமாக இருக்கும் என்றாலும், ஆக. 2 முதல் உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சங்கடங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். எடுத்த முயற்சிகள் வெற்றியாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். புதிய இடம் வீடு வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஆக. 9 முதல் விரய குரு நேர்கதியில் சஞ்சரிப்பதால் அவருடைய பார்வைகள் உங்கள் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பை நீக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வம்பு வழக்கு எதிர்ப்பு என்றிருந்த நிலைகளை மாற்றும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை உண்டாக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் முதலீட்டிற்ற ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். மாணவர்கள் ஆசிரியர் ஆலோசனையை ஏற்பது அவசியம்.

சந்திராஷ்டமம்: ஆக. 4.

அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19, 28. ஆக. 1, 10.


பரிகாரம்: அண்ணாமலையாரை வழிபட எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar