Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆத்மநாதர் கோவிலில் திருவாசக எழுத்து வேள்வி
எழுத்தின் அளவு:
ஆத்மநாதர் கோவிலில் திருவாசக எழுத்து வேள்வி

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2026
10:07

சிதம்பரம்: ஆத்மநாதர் கோவிலில், திருவாசக எழுத்து வேள்விநடைபெற்றது.

சிதம்பரம், வேங்கான் தெரு, திருப்பாற்கடல் மடத்தில் உள்ள ஆத்மநாதர் கோவிலில், மாணிக்க வாசக பெருமான்‘திருவாசகத்தை’ சொல்ல, நடராஜப்பெருமான் தன் கைப்பட எழுதியதாக ஐதீகம்.

இதையொட்டி, நேற்று மாணிக்கவாசகர் பர்ணசாலையில், திருவாசகம் எழுத்து வேள்வி, நேற்று நடந்தது. இந்து ஆலய பாதுகாப்புகுழு தலைவர் செங்குட்டுவன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில்,ஆயிரத்துக்கும் சிவனடியார்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்று திருவாசகம் எழுதினர். மேலும் பலர் திருவாசகம் படித்தனர்.

திருவண்ணாமலையை சேர்ந்த சிவனடியார்சிவக்குமார் ஏற்பாட்டின் பேரில், நேற்று, இதே நிகழ்வு, உலகம் முழுவதும், 22 நாடுகளில், ஒரே நேரத்தில் திருவாசகத்தின், 10 பாடல்கள் எழுதும் வேள்வி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், உலகம் முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

நிகழ்வில், புலவர் கருணாநிதி, உமா, பாலசுப்பிரமணியன், வெங்கடேச தீட்சிதர்,ஆசிரியர் அருணாசலம், சவுந்தரலட்சுமி, புவனகிரி ராஜாமணிகதர்சன் மற்றும் கோவில் நிர்வாகி பசவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக ஆத்மநாதர் மற்றும் குரு நமச்சிவாயர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மனை தரிசிப்போம்.  முன்பு மதுரை வெள்ளத்தில் மூழ்கியது. ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்திற்கு விஜயேந்திர ... மேலும்
 
temple news
சின்னமனூர்: குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு மூன்றாவது வாரமான இன்று ... மேலும்
 
temple news
திருப்பூர்; திருப்பூர், ராயபுரம் பாண்டுரங்கன் கோவிலில், ஆஷாட ஏகாதசி விழாவையொட்டி, பக்தர்கள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar