பதிவு செய்த நாள்
31
ஜூலை
2026
11:07
திருவெண்காடு சுவேதாரண்யேஸ் வரர் கோவிலில் அமைந்துள்ள பிரம்ம வித்யாம்பிகை (சக்தி பீடம்), சகல கலைகள் மற்றும் ஞானத்தை வழங்கும் அபூர்வ மான திருத்தலமாகும்.
இத்தலத்தில் மும்மூர்த்திகள் (சுவேதாரண்யேஸ்வரர், அகோரமூர்த்தி, நடராஜர்) மற்றும் முப்பெரும் தேவியர் (பிரம்ம வித்யாம்பிகை, காளி, துர்க்கை) அருள்பாலிக்கின்றனர்.
சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம் ஆகிய மூன்று புனித தீர்த்தங்கள் உள்ளன.
நவக்கிரகங்களில் புதனுக்குரிய பரிகார தலம். சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் ஒன்றான, தீய சக்திகளை அழிக்கும் உக்கிரமான அகோரமூர்த்தி சந்நிதி இத்தலத்தில் மட்டுமே உள்ள தனிச் சிறப்பாகும். மதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி, மாதங்கி என்ற பெயருடன் வளர்ந்தார் பார்வதி தேவி. சிவனை நோக்கி தவம் புரிந்து, அவரை இத்தலத்தில் கரம் பற்றினார். ஒருசமயம், பிரம்ம தேவருக்கு வித்தை கற்பித்ததால், பிரம்ம வித்யாம்பிகை என்ற பெயர் வந்தது.
ஞானசம்பந்தர் இங்கு வந்தபோது, ஊரெல்லாம் சிவலோகமாக, மணல் எல்லாம் சிவலிங்கங்களாக தோன்றின. பூமியில் கால் வைக்கவே பயந்த சம்பந்தர், அம்மா என்று அழைத்தார். ஓடோடி வந்த பெரியநாயகி, அவரை இடுப்பில் தூக்கிக்கொண்டு கோவிலுக்கு வந்தார். இன்றும் அந்த காட்சி கோயில் பிரகாரத்தில் விக்கிரகமாக காணலாம்.
முகவரி: சுவேதாரண்யேஸ்வர சுவாமி திருக்கோவில்,
கிழக்கு சன் னதி தெரு, திருவெண்காடு.
போன்: 04364256424.
நேரம்: காலை 6.00 --12:30 மணி மற்றும் மாலை 4.00 8:30 .