சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஜென்ம நட்சத்திர பூரம் விழா நடந்தது.கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் ஜென்ம நட்சத்திரமான பூரம் தினத்தை முன்னிட்டு 17 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. சஹஸ்ரநாம பூஜைகளும், மகாதீபாராதனையும் நடந்தது. விழா ஏற்பாடுகளை தியாகராஜன், வேலுமணி ஆகியோர் செய்தனர். விழாவில் திரளான ஆரிய வைசிய சமூகத்தினர் கலந்துக் கொண்டனர்.