வீராம்பட்டினம் ஆலயத்தின் அறங்காவலர் அலுவலகத்தின் தெற்குச் சுவரில் புதைந்துள்ள பழமையான கல்வெட்டு ஒன்று, இக்கோவிலுக்கு நிலக் கொடை அளித்த வரலாற்றுச் சான்றைப் பறைசாற்றுகிறது. காலம் கி.பி. 1897ம் ஆண்டு ஹேவிளம்பி வருடம், சித்திரை மாதத்தில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வினை அந்த கல்வெட்டு பறைசாற்றுகின்றது.
புதுச்சேரி சேர்ந்த வீராம்பட்டினம் அகிலாண்டேசுவரியாகிய செங்கைணியம் மாள் மற்றும் சுப்பா ரெட்டியார் அம்மனின் காலசந்தி மகா நைவேத்தியத்திற்காகவும், பனையடிக்குப்பம் தர்மத்திற்காகவும் விழுப்புரம் தாலுகா வீரணத்தில் உள்ள நஞ்சை நிலத்தை (சர்வே எண்: 349) கொடையாக அளித்துள்ளனர்.
அந்தரசிபாளையத்தைச் சேர்ந்த காள முதயாலு நாயக்கர், அம்மனின் சாயங் கால நைவேத்தியத்திற்காக அதே கிராமத்தில் உள்ள நஞ்சை நிலத்தை (சர்வே எண்: 194)தர்மமாகக் கொடை அளித்துள்ளார். இந்தத் தர்மங்கள் மூலம் வரும் பிரசாதங்களை ஆலயத்தில் பூஜை செய்யும் அர்ச்சகர்களே பயன்படுத்திக் கொள் ளலாம் என்றும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.