ஸ்ரீவில்லிப்புத்துார் கோயிலில், மார்கழி யின் பகல்பத்து திருநாளின் முதல்நாள், ஆண்டாள் தம் பிறப்பிட வம்சாவழியினரான வேத பிரான்பட்டர் வீட்டிற்கு செல்வாள். அந்த வீட்டு முன்பு காய்கறிகளை பரப்பி வைத்து ஆண்டாளுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். இதனை, பச்சைப்பரத்தல் என்பர். கொண் டைக்கடலை, சுண்ட காய்ச்சிய பால், வெல் லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பால், மணிப்பருப்பு நைவேத்யத்தை ஆண்டாளுக்கு படைக்கின்றனர். திருமணம் முடிக்கும் பெண் கள் இதைச் சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல்நிலை கிடைக்கும். ஆண்டாளுக்கு பெரு மாளுடன் திருமணம் நடக்கும் முன் அவளுக் கும் இவ்வாறு கொடுத்தனர் அக்கால மக்கள். அதன் நினைவாக இன்றும் இவ்வழக்கம் தொடர்கிறது. 108 திவ்யதேச சுவாமிகள்
ஸ்ரீவில்லிப்புத்துாரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங் களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம். இதனை நினைவு றுத்தும் விதமாக, ஆண்டாள் கோயில் கருவ றையைச் சுற்றி முதல் பிரகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவிய மாக வரையப்பட்டுள்ளது. இதில் திருப்பாற்கடல், வைகுண்டம் பெரு மாள் உட்பட அனைத்து பெருமாள்களையும் தரிசிக்கலாம்.
வட்ட வாலுடன் ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர், தனது வாலை தலைக்கு மேல் வைத்தபடிதான் காட்சி தருவார். இக் கோயிலில் தட்டொளிக்கு அருகிலுள்ள ஒரு துாணில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கியபடி, வாலை தன்னை வட்டமாக சுற்றி வைத்தவாறு வித்தியாசமான கோலத்தில் இருக்கிறார். சிற்பக்கலைக்கு சான்றாக உள்ள சிற்பம் இது.
மார்கழி நோன்பு
பெண்கள், எவ் வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரண மாக திகழ்ந்தவள் ஆண் டாள். பெருமாள் மீது பக்தி கொண்டு அவ ரையே தன் கணவனாக அடைய விரும்பியவள். அவள் கண்ணனை மணக்க வேண்டி மார் கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்தாள். அவளுக்கு அருள் செய்த சுவாமி, பங்குனி உத்திரத்தில் திருமணம் செய்து கொண்டார். ஆகவே பெண்கள் பாவை நோன்பு இருந் தால் விரும்பிய கண வன் கிடைப்பர் என்பது நம்பிக்கை.