ஆண்டாளை, ரெங்கமன்னா ருக்கு திருமணம் செய்து கொடுப் பதற்காக அவளை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துச் சென்றார் பெரியாழ்வார். அவர்கள் காவிரிக்கரையை அடைந் ததும், தன் கணவன் இருக்குமிடத் தில் பல்லக்கில் செல்வது அவருக்கு மரியாதை தருவதாக இருக்காது என எண்ணினாள் ஆண்டாள்.
எனவே, தன்னை ஆட்கொள் ளும்படி ரெங்கமன்னாரிடம் வேண் டினாள். ரெங்கமன்னாரும் அவளை தன்னுடன் வரவழைத்துக் கொண் டார். இதனிடையே, தன் மகளைக் காண பல்லக்கிற்குள் பார்த்தார் பெரியாழ்வார். ஆனால் ஆண்டாள் அங்கில்லாததைக் கண்டு திகைப்ப டைந்தார். தன் மகளை ரெங்கமன்னார், அழைத்துக் கொண்டதை எண்ணிய அவர் தன் ஊரில் வைத்து ஆண்டாளை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டினார்.
ரெங்கமன்னாரும் ஒப் புக்கொண்டார். அதன்படி பங்குனி உத்திரத்தன்று ஆண்டாளை, ரெங்கமன்னார் ஸ்ரீவில் லிப்புத்துரில் வைத்து திருமணம் செய்து கொண் டார். இதன் அடிப்படை யில் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணமும், தேர்த் திருவிழாவும் நடக்கிறது.
மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய பெருமாள்
கணவன்,
எப்பேர்ப்பட்ட உயரிய பொறுப்பில் இருந்தாலும் மனைவி விரும்பியதை
நிறைவேற்றித்தான் ஆக வேண்டும். இதற்கு உதாரணமாக ஸ்ரீவில்லிப்புத்துாரில்
உள்ள பெருமாள் திகழ்கிறார்.
தன் தந்தை
பெரியாழ்வார் மூலமாக கண்ணனின் லீலைகளைப் பற்றி அறிந்து கொண்ட ஆண்டாள்,
கண்ணன் மீது தீராத அன்பு கொண்டாள். ஸ்ரீவில்லிப்புத்துாரை கோகுலமாகவும்,
தன்னை கோபிகைப் பெண்ணாகவும் பாவித்து பெருமாளை வேண்டி பாசுரங்கள் பாடினாள்.
பெருமாளும் அவளை திருமணம் செய்து கொண்டார்.
ஆனாலும்,
ஆண்டாள் விரும்பியது கண்ணனைத்தானே! எனவே, மனைவி ஆண்டாளின் விருப்பத்தை
நிறைவேற்றுவதற்காக இத்தலத்தில் பெருமாள், ஆண்டாளுக்கு கிருஷ்ணராக
அருள்புரிந்தாராம்.