சீதா தேவியை பூமியிலிருந்து ஜனக மகாராஜா கண்டெடுத்தது போல், ஆண்டாளை தமது நந்தவனத்தில் துளசி செடியின் அடியில் பெரியாழ்வார் கண்டெடுத்தார். அதனால் இவர்கள் இருவரும் பூமாதேவியின் அம்சமாகவே போற்றப்படுகிறார்கள்.
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே என்று ஆண்டாளின் வாழி திருநாமம்
பல காலமாக வணங்கப்படுகிறது. அதனால் பெரியாழ்வார் கண்டெடுத்த பெண்பிள்ளை வாழியே என்று தானே இருக்க வேண்டும். பெரியாழ்வார் கண்டெடுத்ததவராக இருக்கலாம். ஆனால் ஆண்டாளின் திருவுள்ளத்தில் அவர் பெற்றெடுத்த தந்தையாக, எம்பெருமானை காண்பித்துக் கொடுத்த ஆச்சாரியனாக விளங்கினார்.
பட்டர்பிரன் கோதை என்றும், விட்டுச் சித்தர் தங்கள் தேவரை என்றும், தமது பாசுரங்களில் பெரியாழ்வரை ஆண்டாள் நாச்சியார் முன்னிலைப்படுத்துகிறார். " ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல் வளர்த்தேன்" என்று பெரியாழ்வார் உருகுகிறார். அதனால் தான் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே என்று ஆண்டாள் நாச்சியார் போற்றப்படுகிறார்.