ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா கொடியேற்றம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2026 11:08
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா செப்.,4 ல் நடக்கிறது.
25 நாட்கள் நடக்கும் இக்கோயில் விழாவில் தொடக்கமாக நேற்று முன் தினம் இரவு 10:30 மணிக்கு கோயில் கொடி மரத்தில் அனுமான் படம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கொடி மரத்திற்கு தீபாராதனை நடந்தது.
முன்னதாக பிச்சனார்கோட்டை கிராமத்தார் சார்பில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், கொடி ஊர்வலம் செய்தும் கொடியேற்ற நிகழ்வு நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் பட்டது.