பதிவு செய்த நாள்
16
ஆக
2026
12:08
திட்டக்குடி: ஆடிப்பூரத்தையொட்டி, திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் , ஆண்டாள் நாச்சியாருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
மாலை 6:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள ஆண்டாள் நாச்சியாருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செ ல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதா கிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ் ணன் செய்திருந்தனர்.