* நல்லவருடன் பழகு. அவர்களின் குணம் உனக்கும் வந்து விடும். * எளிமையான வாழ்வு நிம்மதியைத் தரும். * தர்ம சாஸ்திரத்தை கடைப்பிடி. மனதில் வைராக்யம் ஏற்படும். *கோயிலுக்கு வேண்டியதை செய்து கொடு. குடும்பம் தழைக்கும். * விநாயகரை வழிபடு. தடைகள் விலகி வெற்றி கிடைக்கும். * நல்லதை நினைப்பதுடன் அதை செயலில் வெளிப்படுத்து. * மந்திரங்களை சொல்லி வழிபடு; மனம் ஒருமுகப்படும். * குடும்பத்தை கவனி. அதுவும் சமுதாயக் கடமையே. * பணத்தின் மீதுள்ள பேராசையை விடு. நிம்மதி காண்பாய். * உலகமே நலமுடன் வாழ வேத மந்திரம் ஓதப்படுகிறது. * பெற்றோரை போற்று. மனம், ஆன்மா நன்மை பெறும். * சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய். தீவினை அகலும். * ஆசையைக் குறை. பாவத்தை விட்டு மனம் விலகும். * உன் வேலைகளை நீயே செய். மனதில் உறுதி உண்டாகும். * வீண் பேச்சு வேண்டாம். நல்லதை மட்டும் பேசு. * இசையின் மூலமாக கடவுளின் திருவடியை அடையலாம். * ‘எல்லாம் ஒன்றே’ என்ற ஞானம் வந்து விட்டால் ஆசை, கோபம் வராது.