* கடவுள் அருள் இருந்தால் மட்டுமே உன்னால் சாதிக்க முடியும். * நன்றாகப் படி. அதுவே உன்னை காப்பாற்றும். * உழைப்பால் கிடைத்த பணமே சிறந்தது. * துன்பத்தில் துணையாக இருப்பவர்களே நல்ல உறவினர்கள். * பெரியவர்கள் கோபப்பட்டால் அதில் அர்த்தம் இருக்கும். * எதிலும் தயக்கம் கொள்ளாதே. * பிறருடைய தயவில் வாழ்வது கோழைத்தனம். * ஆற்றுநீர் போல உனது லட்சியத்தை நோக்கி ஓடு. * எப்போதும் விடாமுயற்சி செய். நீயும் அறிஞனாகலாம். * நல்லவரோடு நட்பு கொள். உன் வாழ்வு பிரகாசமாகும். * எதையும் கூச்சப்படாமல் கற்றுக்கொள். வாழ்வில் முன்னேறலாம். * மனதில் நேர்மை இருந்தால் எதையும் சாதிக்கலாம். * பிறருக்கு அடிமையாக வாழாதே. உழைத்து சாப்பிடு. * உன் கஷ்டத்திலும் உதவி செய்பவனே நல்ல நண்பன். * ஒருவர் செய்த உதவியை மறக்காதே. * பொய் பேசினால் பிரச்னையில் சிக்குவாய். * உயர்வதும், தாழ்வதும் உன் பேச்சில்தான் உள்ளது. * மது அருந்துவதை விட கொடிய பாவம் வேறில்லை.