Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 90 நாள் வழிபட்டால் பிரச்னைகளை ... பக்தர்கள், முனிவர்களுக்காக தங்கிய கார்த்திகேயன் பக்தர்கள், முனிவர்களுக்காக தங்கிய ...
முதல் பக்கம் » துளிகள்
திருமண வரம் அளிக்கும் வீரபத்ரேஸ்வரர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமண வரம் அளிக்கும் வீரபத்ரேஸ்வரர்

பதிவு செய்த நாள்

26 ஆக
2026
10:08

அரண்மனை நகரான மைசூரில், புராதன பிரசித்தி பெற்ற பல கோவில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சிறப்புகள் கொண்டவை. இவற்றில் வீர பத்ரேஸ்வரர் கோவிலும் ஒன்றாகும்.

மைசூரு நகரின், இதய பகுதியான கே.என்.அக்ரஹாராவில், புராதனமான வீர பத்ரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது, 200 ஆண்டுகள் பழமையான, சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும்.

சித்த பசப்பா சுவாமிகளுக்கு, குக்கரஹள்ளி ஏரியில், வீர பத்ரேஸ்வரர் சுவாமியின் விக்ரகம் கிடைத்து. அவர் அந்த விக்ரகத்தை அங்கு வந்து பிரதிஷ்டை செய்ததாக நம்பப்படுகிறது.

விரைவில் திருமணம்


வீர பத்ரேஸ்வரர் கோவிலில் நடக்கும் வழிபாடுகளில், கிரிஜா கல்யாணோத்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் வீர பத்ரேஸ்வர சுவாமிக்கும், பத்ரகாளிக்கும் சம்பிரதாய முறைப்படி திருக்கல்யாணம் நடக்கும். இந்த திருக்கல்யாணத்தில் பங்கேற்று, இதில் வழங்கப்படும் அட்சதையை, திருமணமாகாத இளைஞர், இளம் பெண்ணின் மீது போட்டால், அவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும் என்பது ஐதீகம்.

பல ஆண்டுகளாக திருமணம் தாமதமாகும் ஆண், பெண்கள் இந்த கோவிலுக்கு வந்து, கிரிஜா கல்யாணோத்சவத்தில் பங்கேற்கின்றனர்.

திருமணமாகி குழந்தை இல்லாத தம்பதியர், வீர பத்ரேஸ்வர சுவாமி கோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால், குழந்தை வரம் கிடைக்கும். இதனால் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும், கோவிலை தேடி வருகின்றனர். ஆகஸ்ட் 20ம் தேதி கோவிலில் ரதோற்சவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மைசூருக்கு வருவோர், வீர பத்ரேஸ்வர சுவாமியை தரிசிக்க மறக்காதீர்கள்.

எப்படி செல்வது?

* பெங்களூரில் இருந்து 145 கி.மீ., மங்களூரில் இருந்து, 273 கி.மீ., மாண்டியாவில் இருந்து 44 கி.மீ., ராம்நகரில் இருந்து 94 கி.மீ., தொலைவில், மைசூரு உள்ளது. மைசூரு நகரில் இருந்து, 2 கி.மீ., தொலைவில், வீர பத்ரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

*கர்நாடகாவின் அனைத்து நகரங்களில் இருந்தும், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் வாகன வசதியும் உள்ளது. விமானத்தில் வருவோர் மைசூரின் மண்டகள்ளி விமான நிலையத்தில் இறங்கி, வாடகை வாகனத்தில் கோவிலுக்கு செல்லலாம்.

* தரிசன நேரம்: காலை 6:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல், இரவு 8:30 மணி வரை.

* அருகில் உள்ள கோவில்கள்: திரினேஷ்வரர் கோவில், கிள்ளே வெங்கட ரமணர் கோவில், சுத்துார் மடம், காசி விஸ்வேஸ்வரர் கோவில், மஹாலட்சுமி கொல்லாபுரதம்மன் கோவில்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar