Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமண வரம் அளிக்கும் ... குமரன் குன்று கோவில் வரலாறு குமரன் குன்று கோவில் வரலாறு
முதல் பக்கம் » துளிகள்
பக்தர்கள், முனிவர்களுக்காக தங்கிய கார்த்திகேயன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பக்தர்கள், முனிவர்களுக்காக தங்கிய கார்த்திகேயன்

பதிவு செய்த நாள்

26 ஆக
2026
10:08

உடுப்பி மாவட்டம், குந்தாபுரா தாலுகாவின் பசரூர் அருகில் உள்ள கந்தவாரா கிராமத்தில் 8 – 9ம் நுாற்றாண்டை சேர்ந்த உள்ளூரு ஸ்ரீ கார்த்திகேய சுப்பிரமண்ய சுவாமி கோவில் அமைந்துள்ளது.

கந்தவாராவின் இயற்பெயர் ஸ்கந்தவரம் என்று நம்பப்படுகிறது. சமஸ்கிருதம், கன்னடத்தில், ‘ஸ்கந்தவரம்’ என்றால், ராணுவ முகாம் அல்லது பாசறையை குறிக்கிறது.

முனிவர்கள்

தெய்வீக படைகளின் தளபதியாக கார்த்திகேயன் விளங்கியதால், தெய்வீக பாதுகாப்பு மற்றும் வெற்றிக்காக, அவருக்காக இக்கோவில் அர்ப்பணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஸ்தல புராணங்கள்படி, தாரகாசுரனை வதம் செய்த சுப்பிரமணியர், பல இடங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டு, முனிவர்கள், வீரர்கள், பக்தர்களை ஆசிர்வதித்து வந்தார்.

இந்த பயணத்தின் போது, தற்போதைய கந்தவாராவுக்கு அருகில் உள்ள காடுகள் நிறைந்த கடலோர பகுதிக்கு வந்தார். அங்கு உள்ளூர் மக்களின் பக்தியாலும், தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களாலும் மகிழ்ந்த சுப்பிரமணியர், அவர்களை காக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும், தன் இளமைக்கால வீரர் ரூபத்தில் இந்த புனித தலத்தில் தங்க தீர்மானித்தார்.

சர்ப்ப தோஷம்

சுப்பிரமணியரின் தெய்வீக சக்தி, நாக தெய்வங்களை இப்பகுதிக்கு ஈர்த்தது என்றும் நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே, கோவில் வளாகத்தை சுற்றிலும் பழமையான நாக கற்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. பல நுாற்றாண்டுகளாக இக்கோவில் நாக வழிபாட்டுக்கும், சர்ப்ப தோஷம் தொடர்பான பரிகாரங்களுக்கும் முக்கிய மையமாக விளங்கி வருகிறது.

இக்கோவிலுக்கு புக்கராயா, தேவராயா, மல்லிகார்ஜுன ராயா, விருபாக் ஷ ராயா, கிருஷ்ணதேவராயா ஆகிய மன்னர்கள் விவசாய நிலங்கள், எண்ணெய் விளக்குகளை நன்கொடையாக வழங்கியதுடன், வரி விலக்கும் அளித்துள்ளனர்.

இக்கோவிலில் கண்டெடுக்கப்பட்ட துளு மொழி கல்வெட்டு ஒன்றில், 1408ல் விஸ்வாமித்ர கோத்ர உதபா மற்றும் ஹெப்பார் குடும்பத்தினருக்கு குலதெய்வமாக விளங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருவறையில், இளமைக்கால வீரர் ரூபத்தில், கையில் சக்திவாய்ந்த ஆயுதத்துடன் கார்த்திகேயன் அருள்பாலிக்கிறார். அவருக்கு பின் அவரின் வாகனமான மயில் உள்ளது. இந்த சிற்பம் சாளுக்கியர், பல்லவர் காலத்திய பாணியில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நாக தோஷம் நீங்கவும், குடும்ப நலம், குழந்தைப்பேறு வேண்டியும் பக்தர்கள் வந்து தரிசித்து பலன் அடைகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar