Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி விசாகத்தின் சிறப்பு நோய் தீர்க்கும் முருக மந்திரம் நோய் தீர்க்கும் முருக மந்திரம்
முதல் பக்கம் » துளிகள்
வேலனை போற்றுங்கள் வேதனைகள் விலகி ஓடும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வேலனை போற்றுங்கள் வேதனைகள் விலகி ஓடும்

பதிவு செய்த நாள்

26 ஆக
2026
12:08

சஷ்டி கவசத்தை தினமும் காலையிலும் மாலையிலும்  படித்தால், முருகனே காட்சிகள் பற்றும் தந்ததுஎன்று  விடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று  இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது  பவுர்ணமிக்கு அடுத்து, ஆறாம் நாள் ஜாதகத்தில் ஆறாம்  இடம் துரோகம் கடன் விரோதம் சத்ரு போன்றவை  ஆகியவற்றை குறிக்கும். செவ்வாய் ரோசுக்காரன் இந்த  எல்லா தோஷத்தையும், போக்கும் பெருமான் திருமுருக  பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி என்றால், ஆறு  முருகனுக்கு ஆறுமுகங்கள் சரவணபவ என்று ஆறு  அட்சரம் ஆறுபடை வீடுகள், ஆறு கார்த்திகை  பெண்களால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்த திருவடியை  விடாது பிடித்தால், மேலே சொன்ன ஒரு கெடுதலும்  அண்டாது. வீட்டில் கடன் வியாதி, சத்ரு பயம் இல்லை  என்ற நிலை ஏற்படும்.


சஷ்டி கவசம்


கந்தன் வரும் அழகே அழகு பாதம். இரண்டில் பன்மணி  சலங்கை கீதம் பாட, கிண்கிணியாட, மயில் மேல்  அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது.  இந்திரன் மற்ற எட்டு திசைகளில் இருந்தும், பலர்  போற்றுகிறார்கள். முருகன் வந்து விட்டான் இப்போது  என்னை காக்க வேண்டும். 12 விழிகளும், 12  ஆயுதத்துடன் வந்து என்னை காக்க வேண்டும். அவர்  அழகை வர்ணிக்கும் போது, பரமேஸ்வரி பெற்ற மகனே  முருகா, உன் நெற்றியில் இருக்கும் திருநீறு அழகும்,  நீண்ட புருவமும், பவள செவ்வாயும், காதில்  அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க  நகைகளும், பதக்கங்களும் நவரத்தின மாலை அசைய,  உன் வயிறும் அதில் பட்டு வஸ்திரமும், சுடர் ஒளி  விட்டு வீச, மயில் மேலேறி வந்து, கேட்டவர்களுக்கு  எல்லாம் வரம் தரும், முருகா என்றெல்லாம் அவரை ஸ்ரீ  தேவராயர் வர்ணிக்கிறார்.

அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை. உடம்பில்  தான் எத்தனை பாகங்கள். காக்க என்று வேலை  அழைக்கிறார். வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்கு  புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு  நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு  முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு  கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல், மார்பிற்கு ரத்தின  வடிவேல், மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல்,  பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல்,  வயிற்றுக்கு வெற்றிவேல், சின்ன இடைக்கு செவ்வேல்,  நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல்,  கணைக்காலுக்கு கதிர்வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல்,  கைகளுக்கு கருணைவேல்.

நாபிக்கமலம் நல்வேல், முப்பால் நாடியை முனைவேல்,  எப்போதும் என்னை எதிர்வேல், பகலில் வஜ்ரவேல்,  இரவில் அனையவேல், காக்க காக்க கனக வேல் காக்க,  அப்பப்பா எத்தனை விதமான, வேல் நம்மைக்  காக்கின்றன. அடுத்தது எந்தெந்த வகை பயங்களில்  இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது.


பில்லி சூனியம், பெரும்பகை, வல்லபூதம், பேய்கள்,  அடங்காமுனி, கொள்ளிவாய் பிசாசு, குறளைப் பேய்கள்,  பிரம்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள்  அத்தனையும், முருகன் பெயர் சொன்னாலே, ஓடி  ஒளிந்து விடும் என்கிறார்.

அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும்  பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டை ஓடு,  எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால மந்திரம்,  இவைகள் எல்லாம், சஷ்டி கவசம் படித்தால் செயலிழந்து  விடும் என்கிறார்.

பின் மிருகங்களைப் பார்ப்போம். புலியும் நரியும் எலியும்  கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான் இவைகளால்  ஏற்படும் விஷம், சஷ்டி கவச ஓசையிலேயே  இறங்கிவிடும் என்கிறார். நோய்களை எடுத்துக்  கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒற்றைத் தலைவலி,  வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி,  குடல் புண், பக்கப்பிளவை போன்ற கபம் வியாதிகள்,  இதனைப் படித்தால் உடனே சரியாகிவிடும் என்கிறார்.

இதனைப் படித்தால் வறுமை ஓடிவிடும். நவகிரகங்களும்  நமக்கு துணை இருப்பார்கள் சத்ருக்கள் மனம் மாறி  விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று  கூறப்பட்டுள்ளது. எனவே தினம் தினம் கந்த சஷ்டி  கவசம் படியுங்கள். வேலனை போற்றுங்கள், உங்கள்  வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
மாண்டியாவில், அழகான மாரம்மா கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள மாரம்மா சக்தி வாய்ந்த ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல், நெலமங்களா தாலுகா, பைரஷெட்டிஹள்ளி கிராமம் கொல்லஹள்ளி பகுதியில் பைலாஞ்சநேய சுவாமி ... மேலும்
 
temple news
துமகூரு நகரில் இருந்து, 3 கி.மீ., தொலைவில், பழமையான ஷெட்டிஹள்ளி ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
மீன் போல துாங்காமல் ஆட்சி செய்பவள் என்பதால் தடாதகைக்கு ‘மீனாட்சி’ என்றும், சொக்கவைக்கும் அழகன் ... மேலும்
 
temple news
அம்பிகையின் சன்னதியில் கீழ்க்கண்ட பாடலை பாடுங்கள். நல்லது நடக்கும். குடும்பத்தில் சுபிட்சம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar