Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வற்றாத நீரூற்றை உருவாக்கிய ... சனாதன தர்மத்தை பரப்பும் சக்தி விநாயகர் கோவில் சனாதன தர்மத்தை பரப்பும் சக்தி ...
முதல் பக்கம் » துளிகள்
கேட்டதை அருளும் அனுக்ரஹ விநாயகர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கேட்டதை அருளும் அனுக்ரஹ விநாயகர்

பதிவு செய்த நாள்

14 செப்
2026
12:09

புதுடில்லி ரோஹிணி 9வது செக்டாரில் காயத்ரி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ளது அனுக்ரஹ விநாயகர் கோவில். டில்லியில் வசிக்கும் ஆன்மிக அன்பர்களின் முதன்மை மையமாக திகழ்கிறது.

கடந்த, 1996-ம் ஆண்டு நிறுவப்பட்ட அனுக்ரஹ விநாயகர் கோவிலில், சிருங்கேரி சாரதா பீடத்தின் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகள் முன்னிலையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த கோவில் வளாகத்தில் சிவலிங்கம், சுவாமி ஐயப்பன், பள்ளி கொண்ட பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளும் அமைந்துள்ளன.

மாதாந்தோறும் சங்கடஹர சதுர்த்தி, பிரதோஷம் மற்றும் பிரத்யுஷா தின சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. விநாயக சதுர்த்திக்கு முன்னதாக நடத்தப்படும் சகஸ்ரநாம பூஜை மற்றும் லட்சார்ச்சனை இங்கு வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன.

அதேபோல, பெரிய கோவில்களில் மட்டுமே நடத்தப்படும், ‘சண்டி ஹோமம்’ உலக நன்மை வேண்டி அனுக்ரஹ விநாயகர் கோவிலில் இதுவரை இரண்டு முறை சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

கடந்த, 2002-ம் ஆண்டு இந்தக் கோவிலில் நடத்தப்பட்ட, ‘மஹா ருத்ர யாகம்’ முக்கிய மைல் கல்லாக திகழ்கிறது. இந்த யாகத்தை, 160 சிவாச்சாரியார்கள் ஒன்று கூடி வேத மந்திரங்கள் முழங்க ஒரே நாளில் நடத்தி முடித்தனர்.

ருத்ர ஏகாதசி அபிஷேகத்துடன் தொடங்கி நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த யாகத்தின் நிறைவில் மஹா தீபாராதனையும், பிரம்மாண்ட அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவிலின் முதன்மைத் திருவிழாவான விநாயகர் சதுர்த்தி பெருவிழா 3 முதல் 4 நாட்களுக்கு முன்பே களைகட்டி விடுகிறது.

விநாயகர் சதுர்த்தியன்று காலை லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. மாலையில் கர்நாடக இசைக் கச்சேரி, கதகளி போன்ற பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

மாலையில் நாதஸ்வர இசையுடன் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகளின் ஆன்மிக நடனத்துடன் உற்சவர் வீதியுலா நடத்தப்படுகிறது.

குடியிருப்பில் உள்ள பெண்கள் வண்ணக் கோலமிட்டு, புத்தாடை அணிந்து சுவாமியை வரவேற்று தரிசனம் செய்வர். விநாயகர் சதுர்த்தி நாளில் இரவு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

இந்தக் கோவிலில் விநாயகர் வரப்பிரசாதியாக திகழ்வதால், இங்கு வரும் பக்தர்கள் பலவிதமான ஆன்மிக அனுபவங்களை பெறுகின்றனர். குறிப்பாக, குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்களுக்கு இரட்டை குழந்தைகள் பாக்கியத்தை அருள்வது உட்பட பல அற்புதங்கள் தொடர்ந்து நடக்கின்றன.

அருள்மிகு அனுக்ரஹ விநாயகர் கோவில்,
காயத்ரி அடுக்குமாடி குடியிருப்பு, 9வது செக்டார்,
ரோஹிணி, புதுடில்லி – 110085.

நேரம்: காலை 6:30 முதல் இரவு 9:00 மணி வரை

எப்படி செல்வது:


புதுடில்லி ரயில் நிலையத்திலிருந்து 20 கி.மீ.,

டில்லி விமான நிலையத்திலிருந்து 30 கி.மீ.,

தொடர்புக்கு ஜெயராமன் 98110 44862

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும், ஒவ்வொரு விதமான வழிபாடுகள், பாரம்பரியம் இருக்கும். அதே போன்று, ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில் கெலகினஜுகனஹள்ளி கிராமத்தில் உள்ள தேவரபெட்டா ... மேலும்
 
temple news
மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவில் காவிரி கரையோரத்தில் குஞ்சா (குண்டுமணி) லட்சுமி நரசிம்மர் ... மேலும்
 
temple news
* பணிவும், எளிமையும் இருந்தால் நீயும் தெய்வமாகலாம்.   * ஒரு செயலுக்கு சமமான எதிர்வினை உண்டு. எனவே தீமை ... மேலும்
 
temple news
* உன்னுடைய கடமைகளை சரியாக செய். * பிறருடைய நன்மைக்காக பாடுபடும் போது மனம் துாய்மை பெறும்.  * மனதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar