Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேட்டதை அருளும் அனுக்ரஹ விநாயகர் மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: கோயில் நகரத்தில் கொண்டாட்டம் மதுரை மீனாட்சி அம்மன் ...
முதல் பக்கம் » துளிகள்
சனாதன தர்மத்தை பரப்பும் சக்தி விநாயகர் கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சனாதன தர்மத்தை பரப்பும் சக்தி விநாயகர் கோவில்

பதிவு செய்த நாள்

14 செப்
2026
12:09

தலைநகர் டில்லி அருகே, உத்தர பிரதேச மாநிலம் நொய்டா 51வது செக்டார் கேந்திரிய விஹார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ளது ஆன்மிக ஒளியேற்றும் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில். இருபது ஆண்டுகளாக ஆன்மிக அமைதியையும் சனாதன தர்மத்தையும் பரப்பும் முக்கிய மையமாக திகழ்கிறது.

கேந்திரிய ஆஸ்திக சமாஜம் நிர்வகிக்கும் இந்த கோவில், நொய்டாவில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் தென்னிந்திய மக்களிடையே பெரும் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஆகம விதிமுறைப்படி கடந்த, 2004-ம் ஆண்டு சிறிய பரப்பளவில் கட்டப்பட்ட சக்தி விநாயகர் கோவில், தமிழகத்தின் மயிலாடுதுறையை சேர்ந்த ஆகம நிபுணர்கள் மற்றும் ஸ்தபதிகளின் ஆலோசனைப்படி முழுமையான ஆகம விதிமுறைப்படி கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கோவிலில், 2004ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தை சேர்ந்த வேத விற்பன்னர்கள் பங்கேற்ற மஹாயாகத்துடன் பிரதிஷ்டா மகோத்ஸவம் விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜையும் சிறப்பாக நடத்தப்பட்டது. தேசிய தலைநகர் பிராந்தியத்தின் முதல் பாலாஜி சன்னிதானம் அமைந்துள்ள பெருமையும் சக்தி விநாயகர் கோவிலுக்கு உண்டு. இந்தக் கோவிலில், ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ சக்தி விநாயகர், வள்ளி – தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமண்யர், ஸ்ரீ மஹாவிஷ்ணு, மற்றும் நவக்கிரஹ மூர்த்திகள் அருள்பாலித்து வருகின்றனர். கடந்த, 2006-ம் ஆண்டு பட்டீஸ்வரம் துர்க்கையின் ரூபத்தை ஒத்த ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, ஸ்ரீ கருடாழ்வார் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதிகள் ஸ்தாபிக்கப்பட்டன.

முறையான நித்ய பூஜைகளும் திருவிழாக்களும் காஞ்சி மடத்து பாடசாலையில், எட்டு ஆண்டுகள் ஆகம அத்யயனம் செய்த சிவாச்சாரியார் ஆலய குருக்களாக நியமிக்கப்பட்டு, தினசரி பூஜைகள் செவ்வனே நடைபெற்று வருகின்றன . பக்தர்களின் பங்களிப்பால் அனைத்து மூர்த்திகளுக்கும் வெள்ளி மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மஹா கும்பாபிஷேகம் கோவில் கட்டப்பட்டு, 12 ஆண்டுகள் நிறைவுற்றதை தொடர்ந்து, 2016-ம் ஆண்டு தமிழகத்தின் ஆகம நிபுணர்களின் மந்திரோச்சாரணத்துடன் த்விதீய மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது.

விடாமுயற்சியும் சமூக சேவையும் விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, சஷ்டி விசேஷ அபிஷேகங்கள், பங்குனி உத்திர காவடி பெருவிழா, ஏகாதசி ஆராதனை, சனி பெயர்ச்சி ஹோமங்கள், சனிக்கிழமைகளில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் மற்றும் சஷ்டி திருப்புகழ் பஜனை என ஆண்டு முழுதுமே சக்தி விநாயகர் கோவில் விழாக்களால் களைகட்டியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காலத்திலும்கூட, நித்ய அபிஷேக ஆராதனைகள் இடை விடாமல் நடத்தப்பட்டது. சேவா பரமோ தர்மம் என்ற தத்துவத்தை முதன்மையாக கொண்டு செயல்படும், நொய்டா சக்தி விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மன சாந்தியும் ஆத்ம திருப்தியும் அடைந்து வருகின்றனர்.

இந்த திவ்ய தலத்தில் நடைபெற்று வரும் ஆன்மிக சேவைகளில் அனைத்து பக்தர்களும் பங்கேற்று இறைவனின் அருள் பெறுமாறு கேந்திரிய ஆஸ்திக சமாஜத்தினர் அன்போடு அழைப்பு விடுத்துள்ளனர்.

எப்படி செல்வது:

புதுடில்லி விமான நிலையத்திலிருந்து 30 கி.மீ.,

புதுடில்லி ரயில் நிலையத்திலிருந்து 25 கி.மீ.,

நேரம்: காலை 6:00 மணி முதல் 10:30 மணி வரை; மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

தொடர்புக்கு 98106 39102 99990 37178

அருகில் உள்ள கோவில்: வரசித்தி விநாயகர் கோவில், 22வது செக்டார், நொய்டா. தொடர்புக்கு 98114 23705

கோவில் அர்ச்சகர்: விஸ்வநாதன் கேந்திரிய ஆஸ்திக சமாஜம், கேந்திரிய விஹார், செக்டர் – 51, நொய்டா.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும், ஒவ்வொரு விதமான வழிபாடுகள், பாரம்பரியம் இருக்கும். அதே போன்று, ... மேலும்
 
temple news
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவில் கெலகினஜுகனஹள்ளி கிராமத்தில் உள்ள தேவரபெட்டா ... மேலும்
 
temple news
மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவில் காவிரி கரையோரத்தில் குஞ்சா (குண்டுமணி) லட்சுமி நரசிம்மர் ... மேலும்
 
temple news
* பணிவும், எளிமையும் இருந்தால் நீயும் தெய்வமாகலாம்.   * ஒரு செயலுக்கு சமமான எதிர்வினை உண்டு. எனவே தீமை ... மேலும்
 
temple news
* உன்னுடைய கடமைகளை சரியாக செய். * பிறருடைய நன்மைக்காக பாடுபடும் போது மனம் துாய்மை பெறும்.  * மனதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar