* எல்லாம் நன்மைக்கே. எதைக் கண்டும் கலங்காதே. * நிம்மதியைத் தேடி அலையாதே. அது உன் மனதில்தான் உள்ளது. * மவுனமாக இரு. மனவலிமை தானாகவே ஏற்படும். * பிறருக்கு தீங்கு செய்பவர், தனக்கே கேடு செய்து கொள்கிறார். * தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் செயல்படு. * நீ வாழும் விதத்தைப் பொறுத்தே அவரது முடிவு அமையும். * பொருட்களின் மீதுள்ள பற்றை விட்டு விடு. மகிழ்ச்சி பெருகும். * தர்மம் செய். அதற்கான பலன் உன்னைத் தேடி வரும். * மனதில் உறுதி இருந்தால் நோய் வந்தால் கூட கலங்க மாட்டாய். * மாற்றம் என்பது உலக இயல்பு. இதை புரிந்து கொண்டால் துக்கம் ஏது? * ஐம்பூதம் ஒன்று சேர்ந்தால் பிறப்பு நிகழும். பிரிந்தால் இறப்பு நேரிடும். * பிறரைப் பற்றி சிந்தனை செய்து நேரத்தை வீணாக்காதே. * இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக கருதுபவனே ஞானி. * உன் தகுதியை உயர்த்திக் கொள். அப்போது மகிழ்ச்சி தானாக வரும். * பிறருடைய போற்றுதலையோ, துாற்றுதலையோ பொருட்படுத்தாதே.