* வீணாக பேசாதே. கடவுளின் பெயரைச் சொல். * மனிதனின் பிறவி குணம் எப்போதும் மாறாது. * தர்மத்தின் பாதையில் சென்றால் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும். * புத்தியால் மனதை அடக்கு. வெற்றி பெறுவாய். * கோபத்தை கைவிடு. துன்பம் நெருங்காது. * பிறந்தவர்களுக்கு மரணம் நிச்சயம்; இறந்தவர்களுக்கு மறுபிறவி நிச்சயம். * வேதம் சொன்ன வழியில் வாழ்க்கை நடத்து. * கடவுளை சரணடைவதே நீ கல்வி கற்றதன் பயன். * பலன் கருதாமல் கடமையைச் செய்பவரே ஞானி. * வயதாக வயதாக ஆற்றல் குறைகிறது. ஆனால் ஆசையோ குறைவதில்லை. * பெரியவர்கள் சொல்வதை கேள். அதன்படி நட. * கடவுளுக்கு சேவை செய்வதே உண்மையான மகிழ்ச்சி. * வேதாந்தம் உண்மையைச் சொல்கிறது. அதை அறிந்து கொள். * பேராசையை கைவிடு. இல்லாவிட்டால் அது உன் அறிவை அழிக்கும். * ஒழுக்கமாக வாழ். உனக்கு நற்கதி உண்டு. * உழைத்த பணத்தில் தர்மம் செய். நிம்மதி கிடைக்கும்.