துலாம்: எல்லாரும் நன்றாக இருக்க வேண்டுமென்ற எண்ணமுள்ள துலாம்ராசி அன்பர்களே!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2013 02:03
சிக்கலான நேரம்: உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மாறுபட்ட குணத்துடன் உச்சபலம்பெற்று ராசிக்கு ஆறாம் இடத்தில் உள்ளார். இதே இடத்தில் அமர்வு பெற்றுள்ள சூரியன், செவ்வாய் உங்கள் வாழ்வு சிறக்க நல்ல பலன்களை வழங்குவர். அடுத்தவர்களின் ஆடம்பரத்தைக் கவனித்து, நீங்களும் அதுபோல செயல்படுகிற எண்ணம் கொள்வீர்கள். இதனால் தேவையற்ற சிக்கலும் வீண் செலவும் ஏற்படும். கவனம்.இடம், சூழ்நிலை உணர்ந்து பேசுவதால் நற்பெயரை பாதுகாக்கலாம். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு வராத அளவிற்கு நடந்துகொள்வது நல்லது. வீடு, வாகனத்தில் நம்பகக் குறைவான எவருக்கும் இடம்தரவேண்டாம். தாயின்தேவை அறிந்து நிறைவேற்றுவதால் குடும்ப ஒற்றுமை, மகிழ்ச்சி சீராக இருக்கும். புத்திரர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள பிடிவாதம் செய்வர். அவர்களுக்கு புத்திமதி சொல்லி நல்வழி நடத்துங்கள். முக்கிய செலவுக்காக சொத்தின் பேரில் கடன் பெறுகிற சூழ்நிலை ஏற்படலாம். உடல்நலம் சீராக இருக்கும். எதிரிகளால் துன்பம் வராத சுமூக நிலை உண்டு. தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்.தொழிலதிபர்கள் அளவான உற்பத்தி, சுமாரான லாபம் காண்பர். வியாபாரிகளுக்கு ஓரளவு விற்பனை நடக்கும். பழையபாக்கி வசூலாகும். பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடுமளவு சலுகைகள் இருக்காது.குடும்பப் பெண்கள் கணவரின் சம்மதமின்றி பிறரிடம் பணம் கடன்கொடுக்க, வாங்க வேண்டாம். பணிபுரியும் பெண்கள் அதிக வேலைகளை சந்தித்தாலும், ஓரளவே சலுகை பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் கடும் வேலைப்பளுவைச் சந்திப்பர். லாபம் மிகக்குறைவாக இருக்கும்.அரசியல்வாதிகள் அதிருப்தியாளர்களிடம் தேவையற்றதைப் பேசி சிக்கலில் மாட்டலாம். கவனம். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல், கால்நடை வளர்ப்பில் ஓரளவு லாபம் கிடைக்கும். மாணவர்கள் கவனமாகப் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி விகிதம் சீராகும்.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் செல்வ வளம் அதிகரிக்கும்.
உஷார் நாள்: 13.4.13 காலை 7.47 முதல் அன்று முழுவதும் மற்றும் 16.3.13 இரவு 12.22 முதல் 19.3.13 காலை 11.54 வரை வெற்றி நாள்: ஏப்ரல் 2, 3 நிறம்: வெள்ளை, மஞ்சள் எண்: 2, 3
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »