தனுசு: சூழ்நிலை அறிந்து செயல்படும் தனுசு ராசி அன்பர்களே!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2013 02:03
கடனிலிருந்து விடுதலை: உங்கள் ராசிக்கு இந்த மாதம் நற்பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், ராகு, சனி செயல்படுகின்றனர். உங்கள் வாழ்வின் செழிப்பு கண்டு பொறாமைப்படும் சிலர் அவமானப்படுத்த முயற்சிப்பர். இதனால் பொது விவகாரங்களில் விலகிச் செயல்படுவது நல்லது.தம்பி, தங்கை உறுதுணையாக இருந்து உதவுவர். வீடு, வாகன வகையில் ஓரளவே பலன் கிடைக்கும். புத்திரர்கள் கவனக்குறைவான செயல்களால் சிறு அளவில் உடல்நல பாதிப்பு அடைவர். பூர்வ சொத்து பராமரிப்பில் நம்பகமானவர்களை பயன்படுத்துவது நல்லது. எதிரிகளின் செயலால் வருகிற சிரமங்களை மாற்று உபாயத்தினால் சரிசெய்வீர்கள். கடன்களை அடைத்து மன நிம்மதி அடைவீர்கள். விருந்து விசேஷங்களில் உடல்நலத்திற்கு உகந்த உணவுகளை மட்டும் உண்பது நல்லது.தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து குடும்ப நலன் பாதுகாப்பர். நண்பர்களின் உதவி கிடைத்து மனம் மகிழ்வீர்கள். வெளியூர் பயணத்திட்டத்தில் சில மாற்றம் செய்வீர்கள். தந்தைவழி உறவினர்களிடம் குடும்பத்தின் பழைய விவகாரம் குறித்து பேசினால் சச்சரவே மிஞ்சும்.தொழிலதிபர்கள் உற்பத்தியை அதிகரிப்பதிலும் புதிய ஒப்பந்தங்களை பெறுவதிலும் குறுக்கீடுகளை சந்திக்க வேண்டியதிருக்கும். நம்பிக்கையுடன் செயல்படுவதால் சிரமம் விலகும். வியாபாரிகளுக்கு லாபம் குறையும், சுமாரான விற்பனையே இருக்கும். பணியாளர்கள் அக்கறையுடன் செயல்படுவதால் மட்டுமே பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்ற இயலும். சலுகைகள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் பணவரவுக்கேற்ப செலவுகளில் சிக்கனம் பின்பற்றுவது நல்லது. பணிபுரியும் பெண்கள் உடல்நல ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வதால் மட்டுமே, பணியை குறித்த காலத்தில் நிறைவேற்ற முடியும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையில் சுமாரான அளவையே எட்டுவர். லாபம் எதிர்பார்த்த அளவு இருக்காது. அரசியல்வாதிகள் பெற்ற புகழை பாதுகாக்க கூடுதல் பணம் செலவு செய்வர். விவசாயிகளுக்கு அளவான மகசூல் கிடைக்கும்.மாணவர்கள் கடும் முயற்சி எடுத்தால் தான் @தர்ச்சி பெற முடியும்.
பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் அதிக நன்மை கிடைக்கும்.
உஷார் நாள்: 21.3.13 இரவு 11.21 முதல் 24.3.13 காலை 9.10 வரை வெற்றி நாள்: ஏப்ரல் 6, 7, 8 நிறம்: ரோஸ், நீலம் எண்: 1, 8
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »