Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: சூழ்நிலை அறிந்து செயல்படும் ... கும்பம்: தைரியத்துடன் செயல்களை நிறைவேற்றும் கும்பராசி அன்பர்களே! கும்பம்: தைரியத்துடன் செயல்களை ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
மகரம்: தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வமுள்ள மகரராசி அன்பர்களே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2013
02:03

சுக்கிர மங்கள யோகம்: இந்த மாதம் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் அமர்வு பெற்றுள்ள சூரியன், சுக்கிரன், செவ்வாய் அளப்பரிய நற்பலன்களை வழங்குகின்றனர். ஐந்தாம் இடத்தில் உள்ள குரு, உங்களின் நல்ல சிந்தனைகளை செயல்படுத்தும் விதத்திலான ஆற்றலைத் தருகிறார். சிலர் மீது கொண்ட கருத்து வேறுபாடு மறையும். புகழ் ஸ்தானத்தில் சுக்கிர மங்கள யோகாம்சம் உள்ளது. இதனால் நண்பர், உறவினர் குடும்பங்களில் சுபநிகழ்ச்சி நடக்க உங்களின் சொல்லும் செயலும் முக்கிய காரணமாக அமைந்து உதவும்.வீடு, வாகனத்தில் கூடுதல் வசதிபெற தேவையான அபிவிருத்தி பணி மேற் கொள்வீர்கள். புத்திரர்கள் உங்கள் சொல்லை வேதம் என மதித்து நடந்து படிப்பு, திறமை வளர்ப்பில் முன்னேற்றம் அடைவர். உங்களை எதிரியாக நினைத்து செயல்பட்ட சிலர் மனம்மாறி தன் போக்கில் சென்றுவிடுவர். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பதால் ஆரோக்கியம் சீராக இருக்கும். தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் மிகுந்த  அக்கறையுடன் நடந்துகொள்வர். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.தொழிலதிபர்கள் புதிய இயந்திரங்களை வாங்குவதற்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்கும். உற்பத்தி செழித்து பணவரவு கூடும். வியாபாரிகள் விற்பனை இலக்கில் புதிய சாதனை அளவை அடைவர். உபரி பணவரவு சேமிப்பாக மாறும். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றி குறித்த காலத்தில் பணி இலக்கை பூர்த்திசெய்வர். சலுகைகளும் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் சொல்லை மதித்து நடந்து குடும்பநலன் பாதுகாப்பர். ஆடை, ஆபரணம் வாங்க யோகம் உண்டு. பணிபுரியும் பெண்கள் புதிய நுட்பங்களை பின்பற்றி, பணி இலக்கை திட்டமிட்டபடி நிறைவேற்றுவர். பாராட்டு,வெகுமதி கிடைக்கும். சுயதொழில் நடத்தும் பெண்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்த்த உதவி பெற அனுகூலம் உண்டு. அரசியல்வாதிகள் ஆர்வமுடன் செயல்பட்டு ஆதரவாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கால்நடை வாங்க பணவசதி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: லட்சுமி தாயாரை வழிபடுவதால் தொழில் சிறக்கும். பணவரவு செழிப்பாகும்.

உஷார் நாள்: 24.3.13 காலை 9.11 முதல் 26.3.13 மாலை 4.31 வரை
வெற்றி நாள்: மார்ச் 14, ஏப்ரல் 9, 10
நிறம்: சிவப்பு, இளம் பச்சை   எண்: 1, 5

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar