பதிவு செய்த நாள்
11
மார்
2013
11:03
ராமேஸ்வரம்: மஹா சிவராத்திரி விழாவையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி தேரை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.ஒன்பதாம் நாள் விழாவான, மாசி சிவராத்திரி விழாவையொட்டி, நேற்று அலங்கரிக்கப்பட்ட தேரில், சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளினர். பின், வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க, மகா தீபாராதனை நடந்தது. பின்னர் தேரை வடம் பிடித்து, நான்கு ரதவீதிகளில் இழுத்து வந்தனர். காலை, 9:20 மணிக்கு துவங்கிய தேரோட்டம், 10:30 மணிக்கு நிலை வந்தடைந்தது.உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து எடுத்து வந்த கங்கை நீரை, கலசங்களில் சீதாராம்தாஸ் பாபா தலைமையில் வடஇந்திய பக்தர்கள், நான்கு ரதவீதி, மூன்றாம் பிரகாரம் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்து தரிசனம் செய்தனர்.