பதிவு செய்த நாள்
11
மார்
2013
11:03
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி கோயிலில் மஹா சிவராத்தி விழா நேற்று கொடியேற்றுத்துடன் துவங்கியது. இதையொட்டி, நேற்று காலை மஹா கணபதி ஹோமம், கொடி ஏற்றுதலும், அம்மனுக்கு பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது. இன்று சக்தி கரகம், அக்னி கரகம் கங்கையில் நீராடி விட்டு சன்னதி பிரவேசமும், விடியற்காலையில் முகவெட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 11ம் தேதி காலை, 6 மணிக்கு சூலம் போடுதலும் இதனையடுத்து மாலையில் மயான சூறை புறப்படுத்தலும் நடக்கிறது. 12ம் தேதி காலை கிடாய் உற்சவமும், 13ம் தேதி மாலை அக்னிகுண்டம் தீமிதி விழா நடக்கிறது. 14ம் தேதி காலை அம்மனுக்கு திருக்கல்யாணமும், மாலையில் அம்மன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. வரும்,15ம் தேதி இரவு கும்ப பூஜை, அன்னதானம், கொடி இறக்குதல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பருவதராஜகுல மீனவர் சமுதாயம் ஆகியோர் செய்து வருகின்றனர். விழா நடக்கும் நாட்களில் இரவில் பக்தி கலை நிகழ்ச்சிகள், பட்டி மன்றம், தெருக்கூத்தும் நடக்கிறது.