பதிவு செய்த நாள்
12
மார்
2013
10:03
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பங்குனித் திருவிழா மார்ச் 17ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.விழா தொடக்கமாக மார்ச் 16 மாலையில், கம்பத்தடி மண்டத்தில் எழுந்தருளிய அனுக்ஞை விநாயர் முன் யாக பூஜைகள் நடக்கும்.மார்ச் 17 காலையில் கொடியேற்றம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 27ல் சூரசம்ஹாரம், 28ல் பட்டாபிஷேகம், 29ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம், மாலையில், மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடையிடம், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை விடைபெறும் நிகழ்ச்சியும், மார்ச் 30ல் தேரோட்டம், மார்ச் 31ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.